தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்கு மத்தியில் திமுகவை சேர்ந்த கோவில்பட்டி, விளாத்திகுளம், ஒட்டபிடாரம் பகுதிகளை சேர்ந்த மூத்த முன்னோடிகளை அவர்களது கிராமத்திலேயே சந்திக்கக் கூடிய வாய்ப்பும் கிடைத்தது. குறிப்பாக மொழிப்போர்த் தியாகி பா.முத்து, ராஜாபட்டி ரகுபதி, குமரெட்டியாபுரம் பரமசிவம், 1960, 70களில் மூன்று முறை கோவில்பட்டி ஒன்றியச் செயலாளராக இருந்த அ.கோ.சி. தங்கப்பாண்டியன் போன்றோரை அவர்களது இல்லங்களிலேயே சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது.
கோவில்பட்டியில் கழகத்தை வளர்த்து கட்டிக்காத்த,மு.பெரியசாமி,பொ.தமிழரசன், மாணிக்கம், புலவர்.செல்லையா
இவர்களில் மொழிப்போர்த் தியாகி பா.முத்து, அ.கோ.சி. தங்கப்பாண்டியன் ஆகிய இருவர் ஒருகாலத்தில் கழகத்தின் முக்கிய முன்னோடிகளாக இருந்தனர். முதன்முதலாக திமுக துவங்கப்பட்ட காலத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் திமுக கொடியை அறிமுகப்படுத்தி தெற்கு பஜார் ஜில்விலாஸ் சோடா கம்பெனி கட்டிடத்தின் முனையில் ஏற்றிவைத்தார்.
அதேபோல, திருநெல்வேலி மாவட்ட முதல் மாநாடும் அதே காலக்கட்டத்தில் பழைய நாராயணசாமி தியேட்டர் அருகே சிறப்பாக நடைபெற்றது. தலைவர் கலைஞர் அந்த மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். அண்ணா, ஈ.வி.கி.சம்பத், நாவலர், கே.ஏ.மதியழகன், என்.வி.நடராஜன், எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர், கே.ஆர்.இராமசாமி போன்ற முக்கியத் தலைவர்களெல்லாம் அன்று பங்கேற்றனர். ஏறத்தாழ 60 ஆண்டுகள் கடந்துவிட்டன. அதை கண்ணால் பார்த்து அதற்கு பணிகள் ஆற்றிய மொழிப்போர்த் தியாகி பா.முத்து, அ.கோ.சி. தங்கப்பாண்டியன் போன்றோர் சாட்சிகளாக இந்த வட்டாரத்தில் இன்று இருக்கிறார்கள். அ.கோ.சி.தங்கப்பாண்டியன் கால் நரம்பு பழுதுப்பட்டு சிகிச்சை எடுத்தும் பயனின்றி ஓய்வில் இருக்கிறார்கள். அவரை அவருடைய சொந்த ஊர் கீழ ஊரார் லில் சந்தித்து நலம் விசாரித்தேன்.
கடந்த 1977 காலக்கட்டத்தில் அவசரநிலை காலத்திற்கு பின் கோவில்பட்டி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். 1989 காலக்கட்டத்தில் எனக்காக கீழஇறால் வட்டாரத்தில் தேர்தல் பணிகளையும் ஆற்றினார். இயக்கத்தின் பல வரலாற்று நிகழ்வுகளையும், செய்திகளையும் நினைவுபடுத்தி நேற்று என்னிடம் பேசியது பயனுள்ள சந்திப்பாக அமைந்தது. அவர் நலம்பெற வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.
உடன் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் எல். இராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் ப.மு.பாண்டியன், க. அண்ணாதுரை, டி.ஆர்.குமார், அழகிரிசாமி, பரமசிவம்,தங்கராஜ், கிருஷ்ண வேலு மற்றும் கழகத் தோழர்கள் உடன் வந்தனர்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
08-04-2019
No comments:
Post a Comment