இன்று உ.வே.சா நினைவு தினம்
கிவாஜ அவர்கள் தான் கல்கியை உவேசாவைச் சந்திக்கவைத்தார், கல்கியும் துமிலனும் திருவல்லிக் கேணியிலுள்ள திருவேட்டிஸ்வரன்பேட்டை தியகராஜ விலாசத்திற்கு வந்தனர். கல்கியைப் பார்த்து .’’ அப்படியா டிகேசி அவர்கள் உங்களைப் பற்றிச்சொல்லியிருக்கிறார்கள்.வயதுஅதிகம்இருக்குமென்று நினைத்தேன்’’ என்றாராம் உ வே சா அவர்கள்..அவரைச் சுயசரிதம்எழுதவைத்தவர் கல்கியாம். நாலாண்டுகாலம் நேரில் சென்று வற்புறுத்தி எழுதவைத்தார். அவரின் சுயவரலாற்றை வெளியிட்டது ஆனந்தவிகட.ன். 1942 மே மாதம் தாத்தா காலமானதால் நின்றுபோயிற்றுமொத்தம் வெளிவந்த 122 அத்தியாயங்களையும்தொகுத்து அவர் குமாரர் கல்யாணசுந்தரம் 1950-ல் என் சரித்திரம் என்றபெயரில் நூலைவெளியிட்டார்.
ஆங்கிலத்தில் சாம்வேல் ஜான்ஸன் சுயசரிதை ஒப்ப உவேசா சுயசரிதை உள்ளது. இந்த இரண்டையும் அவசியம் படிக்க வேண்டும்.
சுந்தா அவர்கள் எழுதிய’ பொன்னியின் புதல்வன் நூலிலிருந்து....
#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
26-04-2019
No comments:
Post a Comment