Friday, April 12, 2019

ஒரு தகுதியற்ற மனிதர் பெரிய பொறுப்பில் இருந்து கொண்டு; ராசி இருந்தால்தான் பதவிக்கு வரமுடியுமென்று கூறுகிறார்.

ஒரு தகுதியற்ற மனிதர் பெரிய பொறுப்பில் இருந்து கொண்டு; அரசியலில் ராசி வேண்டும். ராசி இருந்தால்தான் பதவிக்கு வரமுடியுமென்றும் என கூறுகிறார்.

எச்சில் இலை கோபுரத்தில் ஒட்டியதைப் போல அந்த மனிதரை கடந்த 2000ஆம் ஆண்டு வரை யாருக்கும் தெரியாது. ஏதோவொரு நிலையில் முதல்வராகி
விட்டார். அவ்வளதான். அரசியலில் ராசிவேண்டுமென்று ஒரு தத்துவ மேதைபோல தற்போது பேசுகின்றார்

தேவை வியாபார அரசியல்வாதி அல்ல, நேர்மையான அரசியல்வாதி.. வணிக அரசியல் அல்ல மக்கள் நல ஜனநாயக
அரசியல்தான் வேண்டும்.

நல்லவர்கள், நேர்மையானவர்கள், நாணயமாணவர்கள் தேர்தலில் வெற்றிபெறுவதை கால நேர வர்த்தமானங்கள் தான் முடிவு செய்யும். வெற்றி, தோல்வி என்பது அந்த சூழலில் மட்டுமே பேசப்படும்...
எல்லா இறுதியும், எல்லா முடிவும், சரியான பாடத்தை தான் புகட்டும். காலத்தின் ஏற்ற இறக்கங்களில் நல்லவர்களும்,வல்லவர்களும் புறக்கணிக்கப்பட்டாலும் அவர்களை
வரலாற்று பக்கங்கள் ஒரு போதும் புறக்கணிக்காது.

அந்த நாற்காலியில் பொறுப்பில் அமர்ந்த ஓமந்தூரார், குமாரசாமி ராஜா, ராஜாஜி, காமராஜர், அண்ணா, கலைஞர் போன்றோர் இப்படி எல்லாம் பேசவில்லை.

என்ன செய்ய? 
இதுவும் கடந்து போகும். ராசி என்கிறார்களே. மகாத்மா காந்தி கொடுமையாக சுடப்பட்டபோது ராசி என்று எடுத்துக்கொள்வதா?

பொது வாழ்வில் களப்பணிகளும் நேர்மையான ஒழுக்கமே வரலாற்றில் நிற்கும். மழைக்காலங்களில் தோன்றும் தேவையற்ற பூஞ்சானை போல இருக்கும் அவருக்கு இந்த மண்ணில் இவருக்கு என்ன தகுதி இருக்கிறது. இதையும் கேட்டுக் கொண்டு அரசியலில் இருப்பது வேதனையைத் தருகிறது. அவரது பெயரை கூட உச்சரிப்பதுற்கே இழிவாக இருக்கிறது.
மனிதனின் வாழ்நாளுக்கு பிறகும் பேசப்படும் ஆளுமையாக இருக்க வேண்டும்.அதுதான் பொது வாழ்வின் அர்த்தமுள்ள வெற்றி ஆகும்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
12-04-2019

No comments:

Post a Comment

Meeting_with_HonourableAPDeputyChiefMinister, #ShriPawanKalyanGaru

  #Meeting_with_HonourableAPDeputyChiefMinister , #ShriPawanKalyanGaru #ஆந்திராவின்துணைமுதல்வர் #பவன்கல்யாண் உடன் சந்திப்பு ——————————...