Wednesday, April 17, 2019

இன்று(16-4-2019)மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகின்றது.

இன்று(16-4-2019)மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகின்றது. நாளை மறு தினம் 18.04.2019 தமிழகத்தில் தேர்தல்இந்திய மத்திய அரசையும், தமிழ் நாட்டின் அரசியல் தலை விதியையும் நிர்ணயிக்கப் போகின்ற தேர்தல்.

1971லிருந்து ஆரம்பித்த தேர்தல் களப்பணிகள் இன்றுவரை தொடர்கிறது. தேர்தல்களில் வேட்பாளராகவும், வேட்பாளர்களின் முகவராகவும், தேர்தல் பிரச்சார களப்பணிகளும் இன்று வரை 48 ஆண்டுகள் பார்த்தாகிவிட்டாயிற்று. இதில் அன்றைக்கும் இன்றைக்கும் உள்ள வித்தியாசங்களும், நிலைமைகளும், வேறுபாடுகளும், மக்களுடைய மனப்பான்மையும் தேர்தலுக்குத் தேர்தல் மாறுபட்டே வருகின்றன. திரும்பவும் வாக்குச் சீட்டு முறை வேண்டுமென்ற கோரிக்கை மேல் எழுகிறது. எப்படி ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் மீண்டும் வாக்குச் சீட்டுகள் வந்ததோ அதைபோலவே இங்கேயும் கொண்டுவர வலியுறுத்தப்படுகிறது. அன்றைய தேர்தல் பணிகள் மனநிறைவை தந்தன. இன்றைய தேர்தல் பணிகள் வியாபார அரசியலாகவே உள்ளது. அன்றைக்கு எளிமையான பிரச்சாரங்கள் செய்ததெல்லாம் இந்த புகைப்படங்களை பார்க்கும்போது நினைவுக்கு வருகிறது. இன்றைய நிலையில் பிரச்சாரம் செய்யவே தேவையில்லை, பணமிருந்தால் மட்டுமே போதும். தேர்தல் அரசியல் சதுரங்கத்தில் எத்தனையோ நல்லவர்களும், நேர்மையானவர்களும் பந்தாடப்படுவது சகஜமாகிவிட்டது. என்ன செய்வது?தகுதியே தடை...
Issues are non issues, but non issues are issues here.எது வேண்டும் என்பதை விட எது வேண்டாம் என்பதற்கு முன்னுரிமை கொடுத்தே வாழ்ந்துள்ளோம்.
ஆனால் அறத்தின் பக்கம் நின்றால் யாரை எதிர்கொள்ளவும் இப்படி அச்சப்பட வேண்டியதில்லை!

(படம். 1989இல் சட்டமன்ற தேர்தலில் நான் வேட்பாளராக போட்டியிட்ட படம். இன்றைக்கு நடந்துகொண்டிருக்கும் தேர்தல் பிரச்சாரப் பணி.)
Image may contain: 1 person, standing, wedding, crowd and outdoorImage may contain: 1 person, standing and weddingImage may contain: 6 people, including Raj V Antoni
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
16-04-2019

No comments:

Post a Comment

You'll be surprised by how consistently things will show up exactly as you need them to, and not a moment before. When it's time to act, the energy will come.

  You'll be surprised by how consistently things will show up exactly as you need them to, and not a moment before. When it's time t...