Monday, April 22, 2019

இன்றைய நாள்,ஏப்ரல் 18 - இலங்கையில் டபிள்யூ. ஆர். டி. பண்டா-செல்வா ஒப்பந்தம் முறிந்த நாள்.


இன்றைய நாள்,ஏப்ரல் 18 - இலங்கையில் டபிள்யூ. ஆர். டி. பண்டா-செல்வா ஒப்பந்தம் முறிந்த நாள். 

பண்டாரநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தம், 1957 ஜூலை 26 அன்று அப்போதைய இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்காவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் ஆகும்.

தனிச் சிங்களச் சட்டம், "இந்திய வம்சாவளியினர்" என கூறப்பட்ட தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு வந்த தமிழ் தோட்டத் தொழிலாளர் குடியுரிமை பறிப்பு, தமிழ்ப் பிரதேசங்களில் அத்துமீறிய குடியேற்றங்களினால்கொந்தளித
தெழுந்த தமிழ் மக்கள் ஆத்திரமடைந்து பல்வேறு வகையான அறவழி போராட்டங்களில் ஈடுபட்ட தமிழர்களை சமாதானப்படுத்தும் இந்த ஒப்பந்தம் பண்டாரநாயக்காவால் கையொப்ப
மிடப்பட்டது. 

பின்னர் இவ்வொப்பந்தத்தை எதிர்த்து அக்டோபர் 4, 1957 இல் ஜே. ஆர். ஜெயவர்த்தனா உட்பட பல இனவெறி கொண்ட சிங்களத் தலைவர்கள் பலரும் கண்டிக்கு நடத்திய எதிர்ப்பு காரணமாகவும் இனவெறி கொண்ட பௌத்த பிக்குகள் பலரும் தீவிரமாக எதிர்த்தமையாலும் இவ் வொப்பந்தம் செயல்பாட்டிற்க்கு வரவில்லை.

ராஜீவ் காந்தி-ஜே. ஆர், இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை கூட சிறிலங்கா அரசு குப்பையில் போட்டது.
இதுபோல போராடும் ஈழமக்களை முடக்க ஒப்பந்தங்களை கைச்சாத்திடுவதும் பின்பு அதை கிடப்பில் போடுவது சிங்கள பேரினவாத அரசுகளுக்கு வாடிக்கை.....
இப்படி 70 ஆண்டுகளில் இப்படியான 10 மேலான ஒப்பந்தங்கள் .....
தமிழர்களின் துயரம் நீடிக்கிறது.


#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

22-04-2019


Image may contain: 1 person, sitting

No comments:

Post a Comment

Confidence means believing in yourself, feeling comfortable with who you are, and recognizing that you have worth.

  Confidence means believing in yourself, feeling comfortable with who you are, and recognizing that you have worth. Believing in yourself, ...