Tuesday, April 16, 2019

#தேர்தல்பிரச்சாரப்பயணமும் #கழுகுமலை

#தேர்தல்பிரச்சாரப்பயணமும் #கழுகுமலை
———————————————-
தேர்தல் பிரச்சாரப் பயணத்தின்போது கழுகுமலை வட்டார கிராமங்களுக்கு செல்லவேண்டியிருந்தது. பயணிக்கும்போது கழுகுமலையின் கம்பீரம் இன்னும் அப்படியே பார்க்கமுடிந்தது.
சிறுபிராயத்தில் கிராமத்துவீட்டின் மாடியிலிருந்து கழுகுமலையும், இரவு நேரத்தில் மலைக்கோவிலில் எறியும் விளக்கும், சங்கரன்கோவில் கோமதியம்மாள் திருக்கோவிலின் கோபுரமும் நித்தமும் பார்ப்பதுண்டு. இப்போது வீட்டின் மாடியிலிருந்து பார்த்தால் இது சரியாக தெரிவதில்லை. அந்த அளவு கம்பீரம் இந்த சாமைலயில் பயணிக்கும்போது பார்க்க கடுமையான வெயிலிலும் ரம்மியமாக பார்க்கமுடிந்தது.
விசாகத் திருவிழாவிற்கு சென்றால் சத்திரங்களில் சமைத்து உணவு வழங்குதல், மாம் பழம் சாப்பிடுதல், கோவிலில் உச்சியில் கைகளை பிடித்து கொண்டு சென்றுவந்ததெல்லாம் நினைவுகள்.காலச்சக்கரங்கள் ஓடிவிட்டன. ஆனால் இன்று ஏற முடியாத நிலைதான்.
இன்னும் #வெட்டுவான்கோவில் கீர்த்தியை சரியாக உலகறியவில்லை. தெற்கே இது ஓர் எல்லோரா.....!!!
அபூர்வ சிற்பங்களின் அமைவிடம் கழுகுமலை! ஜைனம், பௌத்தம், சைவம் வளர்ந்த ஊர் கழுகுமலை. தச்சசீலமும், நாளந்தா போன்ற புகழ்பெற்ற கலாசாலைகளும் இருந்தன.
சென்னிமலை அண்ணாமலை ரெட்டியார், காவடிச்சிந்து பாடியது கழுகுமலை முருகன் புகழை.
இருதாலய மருதப்பதேவர் காவடி எடுத்த போது கால்நடை களைப்பு போக்க அண்ணாமலை ரெட்டியார் பாடினார்.சிந்து இசை பெருமைகளை ஐநா மற்றும் உலகறிய வேண்டும்.
இங்குள்ள முருகன் சன்னிதி, மேற்கு முகமாக அமைந்திருப் பதால், இத்தலம் தென்பழனி என்றே அழைக்கப்படுகிறது. கற்பாறையைக் குடைந்து, குகைக்குள் மூர்த்தி அமைந்துள்ளார். இக்கோவிலுக்கு விமானமோ, சுற்றுப்பிரகாரமோ இல்லை.
கோவிலுக்கு அருகே, குமார தெப்பம் என்ற அழகிய தெப்பம் உண்டு.
கி.பி., 768-800ல், உருவான அற்புதமான சமண சிற்பங்கள் உள்ளன.
மேலும், உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை ஈர்ப்பது இங்குள்ள கல்வெட்டுவான் கோவில்தான்.
மலையில், மிகப்பெரிய அகண்ட பரப்பில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட வெட்டுவான் கோவிலை பார்த்துக் கொண்டே இருக்கலாம். கி.பி., 8ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட, தென் தமிழகத்தில் உள்ள ஒரே ஒற்றைக்கல் கோவில் இதுதான். முற்றுப்பெறாத சிற்பங்கள் எனினும், ஒவ்வொன்றும் அற்புதமான அழகைக் கொண்டுள்ளன. மகாபலிபுரத்தில் உள்ள ஐந்து ரத சிற்பங்களுக்கு இணையான சிற்பங்கள் இங்குள்ளவை.
இவை தவிர, சமண துறவிகளின் சிற்பங்களின் அணிவகுப்பு, உயர்ந்து நிற்கும் ஐயனார் சிலை, அம்மன் கோவில்கள், குகையில் இருக்கும் சிவன் என்று, பல விஷயங்களை பார்த்துக் கொண்டே இருக்கலாம். இப்படி பல அரிய விஷயங்களைக் கொண்ட
கழுகுமலையில், நிறைய மண்சார்ந்த கலைஞர்கள் உள்ளனர். இவர்களின் வில்லுப்பாட்டு, ஒயிலாட்டம், சிலம்பாட்டம், நையாண்டிமேளம் போன்றவை, நாடு முழுவதும் புகழ் பெற்றுள்ளது. கழுகுமலையின் சிறப்புமிக்க கடலை மிட்டாய், இனிப்பு சேவு, சில்லு கருப்பட்டி போன்றவை, மண் மணம் மாறாத சுவை கொண்டுள்ளன.
ஒடிசாவில் உள்ள கொனார்க் சூரியனார் கோவிலும், கஜுரோஹா சிற்பங்களும் ஒரு காலத்தில் புதர்மண்டி தான் கிடந்தன. அங்குள்ள பொதுமக்களிடம் முதலில் இதன் அருமை தெரியவில்லை. அதன்பிறகு ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக, இன்று தலைசிறந்த சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அது போல, போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டால், கழுகுமலை மிகவும் புகழ்பெறும். தொன்மையான வரலாற்று சிறப்புமிக்க கழுகுமலையை அதன் ஒரு கட்டமாக, யுனெஸ்கோவின் பட்டியலில் கழுகுமலையின் பெயரை சேர்ப்பதற்கான முயற்சியில், தீவிரமாக இறங்கியுள்ளது.
#வெட்டுவான்கோவில்
#கழுகுமலை
#இந்திய_தேர்தல்
#தூத்துக்குடிநாடாளுமன்றதொகுதி
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
#KSRPostings
#KSRadhakrishnanPostings
15-04-2019

Image may contain: sky, grass, outdoor and natureImage may contain: one or more people, sky, outdoor and natureImage may contain: 2 people, people standing, outdoor and natureImage may contain: sky, cloud, mountain, outdoor and natureImage may contain: sky, outdoor and natureImage may contain: sky, outdoor and nature

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...