உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விஜய் சிங் என்பவர் தன் சகோதரரைச் சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு 19 82 நவம்பரில் கைது செய்யப்பட்டார்! அப்போது அவருக்கு வயது 28! இந்தக் கொலை வழக்கை விசாரித்த கான்பூர் விசாரணை நீதிமன்றம் அவரைக் குற்றவாளி என அறிவித்து 1985 டிசம்பரில் ஆயுள்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது!
இதை எதிர்த்து விஜய் சிங் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்! எனினும் இந்த மேல்முறையீட்டு மனுவை 40 ஆண்டுகளாக விசாரிக்காமல் அலகாபாத் உயர் நீதிமன்றம் நிலுவையிலேயே வைத்திருந்தது! ஒரு வழியாக கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி விஜய் சிங்கின் மேல் முறையிட்டு மனுவைத் தள்ளுபடி செய்து 20 பக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது! கொலை வழக்கில் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க நீண்ட காலம் எடுத்துக் கொண்டதைச் சுட்டிக்காட்டி விஜய் சிங் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் மூலம் முறையிடப்பட்டது! அதில் தற்போது எனக்கு 72 வயதாகிறது என் இளமை நடுத்தர வயது தற்போதைய முதிய வயது என ஒட்டுமொத்த வாழ்க்கையையும் குற்றவாளி என்ற நிழலில் கழித்து வருகிறேன்!அந்த அளவிற்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக எனது மேல்முறையீட்டு மனு விசாரிக்கப்பட்டுக் கடைசியாக ஒரு பலனும் இன்றித் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது! எனக் குறிப்பிட்டு இருந்தார்! அவரது மனு உச்ச நீதிமன்றத்தின் கோடைக்கால அமர்வு நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் சந்துர்கர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது! கொலை வழக்கில் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க 40 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பது ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகிறது! தேங்கிக் கிடக்கும் வழக்குகளால் நீதி பரிபாலனத்தில் பெரும் முடக்கம் ஏற்பட்டுள்ளது. எனக் குறிப்பிட்டனர்.. இந்த நிலையை மாற்ற என்னென்ன உத்திகளைக் கையாள வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது என்று நீதிபதிகள் தங்கள் அக்கறையை மிகக் காத்திரமாக வெளிப்படுத்தினார்கள்.வழக்கு விசாரணையின் போது விஜய் சிங் மூன்று மாதங்கள் மட்டுமே சிறையில் இருந்ததையும் அதன் பின் நாற்பத்தி இரண்டு ஆண்டுகளாக ஜாமீனில் இருந்தபடி மேல்முறையீட்டு வழக்கை நடத்தி வந்ததையும் நீதிபதிகள் கவனித்தனர்! எனவே இந்த நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து முடிக்கும் வரை அவரது ஜாமீனை நீட்டிப்பதாகவும் உத்தரவிட்டனர்.தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிப்பது என்பது இந்தியா முழுக்க உள்ள நீதிமன்றங்களின் பொறுப்பாக இருப்பதையும் அவை ஏன் தேங்கி கிடக்கின்றன என்கிற முறையில் மீண்டும் தங்களது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்தார்கள். எனக்குத்தெரிய ஏறக்குறைய 70% வழக்குகள் தீர்ப்பு இன்றி தேங்கி கிடப்பது இந்திய நீதித்துறையின் பலகீனமாக இருக்கிறது! பெரும்பாலாக விவாகரத்து வழக்குகள் கொலை மற்றும் பாலியல் குற்றங்கள் பலவும் இதில் பிரதானமாகக் காணப்படுகின்றன. நீதித்துறையின் தாமதத்திற்கு யார் காரணமாக இருக்கிறார்கள்!? உண்மையில் என்ன பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது!? என்பதற்கெல்லாம் ஒரு திறந்த விசாரணையும் மீண்டும் சட்டத்துறையை உலுக்கி ஒரு நம்பகத்தன்மையை மக்களிடம் ஏற்படுத்துவதும் நடைமுறை சார்ந்த முக்கியமான ஒன்றாக இருக்கிறது.! விரைவாக இந்த வழக்குகளை முடிப்பதற்குச் சட்டம் நீதி மற்றும் வழக்கறிஞர்கள் காவல்துறை சட்டசபை நாடாளுமன்றங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டியது அவசியமான அறமாக இருக்கிறது. நீதிபதிகளின் கவலைகள் எதிர்கால இந்தியாவின் மீது ஒரு கவன ஈர்ப்பை ஏற்படுத்துகிறது! தேங்கிக் கிடக்கும் வழக்குகள் ஒரு அவமானம்! வேறு என்னத்தைச் சொல்ல! #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost
Subscribe to:
Post Comments (Atom)
சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்
சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment