ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் என்று சொல்லக்கூடிய ஏ ஐ தொழில்நுட்பமானது இன்று எல்லாத் துறைகளிலும் புகுந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது! என்றாலும் கொண்டு கூட்டிக் காண்பிக்கப்படும் அதன் மிகைத்தன்மையால் அவை மெய்யற்றது மற்றும் ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பம் என்றே நான் சொல்லுகிறேன். ஆனால் அவை தொடர்ந்து ஊடகங்களின் மூலம் காட்டப்படுவதால் அதுவே உண்மை என்று நம்ப வைக்கப்படுகிறது! அதாவது தகுதியற்றவைகளை தகுதி உள்ளது போலச் சித்தரித்து அதற்கு ஒரு உச்சபட்ச போலி மதிப்பை வழங்குவதன் மூலம் பல ஏமாற்று வேலைகளும் நடக்கின்றன!
. எதார்த்தம் மறைக்கப்பட்டு தொழில்நுட்பமே இனிமேல் நம்மை ஆட்சி செய்யும் என்கிற இடத்திற்கு மனிதனை கீழே இறக்கி இந்த மோசடி அதீதப் பெருக்கமாகி உலகமெங்கும் விரவியுள்ளது.! இது சம்பந்தமான அதிநவீன நிறுவனங்கள் இவற்றைப் பயன்படுத்தி கோடிக்கணக்கில் லாபம் ஈட்ட முயற்சி செய்து வருகிற நிலையில் உழைக்கும் வர்க்கமே ஸ்தம்பித்து நிற்கிறது. இல்லை இது ஒரு வளர்ந்து வரும் தொழில் நுட்பம் இதை ஒன்றும் செய்ய இயலாது என்று யார் கூறினாலும் வள்ளுவர் சொல்லுவது போல எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பதற்கு இணங்க இந்த ஏஐ தொழில்நுட்பத்தை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுதான் எனது நிலைப்பாடு. மேலும் அது தனி நபர்களின் ஈகோவையும் நார்சிசப் போக்கையும் பெருக்கி ஒரு விதமான அகங்காரத்திற்கும் வன்முறைக்கும் வழி வகுக்கும் தன்மையுடன் இருப்பதால் இந்த ஏ ஐ தொழில்நுட்பத்தால் விளையப் போகும் நன்மைகள் யாருக்கோ போய்ச் சேர அதன் தீமைகள் எளிய மக்களை கடுமையாக தாக்கும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது! . இந்த எ ஐ தொழில் நுட்பத்தால் எளிய கிராமப்புற விவசாய மக்களுக்கு ஒரு நன்மையும் கிடைக்கப் போவதில்லை! மற்றபடி தொழில் நுட்ப மூளைகள் இதை எவ்வாறு பயன்படுத்தி நம்மை எல்லாம் முட்டாளாக்குவார்கள் என்பதும் தெரிந்து தான் இருக்கிறது! தகுதி உள்ளவர்களை மறைத்து தகுதியற்றவர்களை பெரிய தலைவர்களாகக் காட்டும் மோசடியும் இதில் தான் நடக்கிறது.! இதன் அடிப்படையில் தான் எ ஐ தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் சமீபமாக தனது தீர்ப்பில் அறிவித்துள்ளது. தகுதிக்கு மீறிய வீரியத்தையும் அளப்பரிய அழகியல் காட்சிகளையும் எதார்த்தத்தில் நடக்கவே முடியாத அதிசயங்களையும் காட்டிப் பொது வாழ்க்கையை நிலை குலையைச் செய்வதை நீதிமன்றம் கண்டனம் செய்கிறது ! இன்றைக்கு ஹைதராபாத் சென்னை பெங்களூர் போன்ற ஐ டி மென்பொருள் வன்பொருள் நிறுவனங்களில் இந்த ஏ ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொண்டு பலரையும் வேலை நீக்கம் செய்கிறார்கள்! இது மனித ஆற்றலுக்கும் சக்திக்கும் விரோதமானது என்று தான் நான் குறிப்பிட விரும்புகிறேன். குறிப்பாக தகுதியற்றதைத் தகுதி உள்ளதாக் காட்டும் இந்த மாயாஜாலம் அல்லது இந்த மாயை அற்பத்தனமானது!. அடுத்தவர்கள் குறிப்பிடுவதைக் காட்டிலும் தங்களைத் தாங்களே ப்ரொமோட் செய்து கொள்ளும் இந்த மோசடி அனைத்தையும் நம்ப முடியாத நிலைக்கு விரைவில் கொண்டு செல்லும்! இன்றைக்கு உள்ள ஊடகங்கள் கட்டணங்களைப் பெற்றுக் கொண்டு தகுதியற்றவர்களை தகுதி உள்ளவராகக் காட்டுகிற முயற்சியில் இந்த ஏ ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி லாபம் குவிக்கின்றன! நேர்மையோ உண்மையோ மூல விழுமியங்களோ எல்லாவற்றையும் அழித்து ஒழித்து இந்த பொய்யும் புரட்டும் போலியும் மேலுக்கு வந்தால் என்ன நிலைமை ஏற்படும் என்பதை விரைவில் காணத்தான் போகிறோம். இந்த லட்சணத்தில் இதையெல்லாம் பயன்படுத்திக் கொண்டு அற்பர்களும் தகுதியற்றவர்களும் நாங்களும் தலைவர்கள்தான் என்று வலம் வருவதை என்னவென்று சொல்வது! விரைவில் இதற்கு ஒரு கட்டுப்பாடு ஏற்படுத்தத் தான் வேண்டும்!
Subscribe to:
Post Comments (Atom)
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment