*தமிழ்நாட்டின் நிதி மேலாண்மை குறித்த
#வெள்ளைஅறிக்கை* *தமிழக அரசு கடன் ரூ 13. 18 லட்சம் கோடி* *தனி நபர் மீதான கடன் ரூ.1,28,934* *தீர்வை சொல்லாத தமிழக அரசின் நிதி நிலை வெள்ளை அறிக்கை* *வெற்று அச்சு அறிக்கை தான்*. ••••• ஆப்பசைத்த குரங்கின் கதையாக 13 லட்சம் கோடி கடன், 78 ஆயிரம் கோடி பற்றாக்குறை எனத் தமிழக நடிகர் விஜயின் தவெ க அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது!, ஊருக்கே தெரிந்த ரகசியம் தான் இதில் என்ன வெள்ளை அறிக்கை விட வேண்டியதிருக்கிறது?. எத்தனையோ பேரை கவர்ச்சி காட்டி ஏமாற்றி ஓட்டுகளை வாங்கி விட்டு இப்போது ஓட்டு போட்ட மக்களை மீண்டும் ஏமாற்றத் திட்டம் தீட்டி விட்டார்கள். திமுக ஆட்சியில் கஜானா காலியாகி இத்தனை கோடி பற்றாக்குறையும் கடனும் இருக்கிறது என்று தெரிந்த பிறகு இவர்கள் வாக்குறுதி கொடுத்தார்களா?இல்லை கஜானா நிறைந்திருக்கிறது என்ற நினைப்பில் வாக்குறுதி கொடுத்தார்களா! ஏற்கனவே திமுக அரசின் கடன் தொகை இலவசங்களால் விரயம் செய்யப்பட்டு அதுவும் ஓட்டு வங்கிக்காக இறைக்கப்பட்டது தெரிந்தும் கூட விஜய் எப்படி இவ்வளவு வாக்குறுதிகளை மக்கள் முன்பு கொடுக்கிறார் என்பது வேடிக்கையாகயும் அபத்தமாகவும் இருக்கிறது. மெத்தப் படித்த சமூகத்தில் இப்படியான அரசியல்வாதிகள் எப்படி இடம் பெறுகிறார்கள் என்பதே தெரியவில்லை! இன்னும் இரண்டு நாட்களில் த வெ க வின் முதல் சட்டமன்ற கூட்டமும் பட்ஜெட் தாக்கலும் நடக்க இருக்கிறது. ஆக இந்த பட்ஜெட் தாக்கல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே வாயால் வடை சுட்டு இருக்கிறார்கள். ஆறு சிலிண்டர்கள் இலவசமாம் எல்லோருக்கும் பேருந்து இலவசம் வேலை இல்லாதவனுக்கு 4000 உதவி பணம் வீட்டில் சும்மா இருக்கும் பெண்களுக்கு மாதம் 5000 போக தாய் மாமன் சீர் தங்கச் சீர்வரிசை எல்லாம் இந்த பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டுமே ஆக அது கனவிலும் முடியாது. எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் இப்படியான கேலிக் கூத்துகள் நடக்காது தமிழ்நாட்டின் நிதி மேலாண்மை குறித்த வெள்ளை அறிக்கையில் ஏற்கனவே தனி நபர் மீதான கடன் 1,28,934 ருபாய்ச் சுமையாக இருக்கிறது. இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டு நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் ஏதோ தெரியாத்தனமாகச் சொல்லிவிட்டோம் மன்னிக்க வேண்டும் இந்த பற்றாக்குறை நிலையில் இவற்றையெல்லாம் நிறைவேற்ற முடியாது!என்று இனிமேல் காலில் விழுந்து கெஞ்சுவார்கள் போல் இருக்கிறது நிலைமை!! இதுவெல்லாம் உங்களுக்கு விவரமாக எடுத்துச் சொல்ல இன்னும் சற்று நாளில் மேடைகளில் விஜய் அவர்கள் டிராம்பில் நடந்து வந்து தோன்றுவார்.! அதுவரை நீங்கள் பொறுத்திருக்க வேண்டும் என்று சொல்லப் போகிறார்கள். காலமே! காலமே!! தமிழ் சமூகத்தை என்ன செய்யக் காத்திருக்கிறாய்? என்று தான் கேட்கத் தோன்றுகிறது. விஜய்யைப் பார்த்தால் போதும் என்று நம்புகிற இந்த அரசியல் அறிவற்ற இளம் தலைமுறைகள் நீங்கள் என்ன வேணாலும் சொல்லிக் கொள்ளுங்கள் விஜய் தன்னுடைய சொந்த காசை போட்டு எங்களுக்குத் தருவார் பாருங்கள் என்று மீண்டும் ஒருமுறை கரூர் போல ஏதாவது ஒரு கூட்டத்திற்கு அவர் வருகைக்கு வேண்டிச்செல்லக் காத்திருப்பார்கள். பி டெக் எம் பி ஏ முடித்துள்ள மாநில நிதி அமைச்சர் தமிழைத் தட்டுத் தடுமாறி உச்சரிக்கிறார். ஆங்கிலம் அதிலும் மோசம்! எழுதிக் கொடுத்ததை பார்த்து படிப்பதிலேயே இவ்வளவு சிரமம் இருக்கிறது எனில் இவரை கல்வித் தந்தை என்று வேறு அழைக்கிறார்கள்!பரிதாபமாகத்தான் இருக்கிறது! வெள்ளை அறிக்கை வெளியிட்டு விட்டு அரசாங்கத்தை மேற்கொண்டு நடத்துவதற்கான வழிமுறைகள் என்ன என்றும் தெரியாமல் இருக்கும் இந்தக் கூட்டம் அதை நம்பி இருக்கும் மக்கள் பல்வேறு துறைகளில் உண்டாகும் குழப்பம் எல்லாவற்றுக்கும் திணறிக் கொண்டிருக்கும் இந்த அரசு மௌனம் காக்கும் முதல்வர் விஜய்! இதற்கான ஒட்டுமொத்த எதிர்வினையை தமிழக பாஜக விரைவில் துவங்க இருக்கிறது! #tvk #tamilnadupolitics #TamilNaduGovernmentwhitepaper #whitepaper #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost
Subscribe to:
Post Comments (Atom)
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment