Friday, June 26, 2026
#முல்லைப்_பெரியாறு அணை
கிட்டத்தட்ட 130 ஆண்டுகள் கழிந்து கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது முல்லைப் பெரியாறு அணை. இன்னும் 869 ஆண்டுகளுக்கும் அது கம்பீரமாக நிற்கும்.
ஆனால் அதற்குள்ளாகவே அணையை உடைக்க வேண்டும், இடிக்க வேண்டும் என்று, கேரளாவில் கூக்குரல்கள் எழுந்து கொண்டே இருக்கிறது. அவர்கள் அணையை உடைக்க வேண்டும் என்று கிளம்பி ஆண்டு 50 ஐ தொடப் போகிறது. ஆனாலும் அணை உடையவில்லை.
அந்த அணைக்காக கேரளா செய்யும் செலவு மிக அதிகம். இன்னும் சொல்லப் போனால் கேரளாவில் மிகப்பெரிய காவல் நிலையமே முல்லைப் பெரியாறு அணையில் தான் செயல்பட்டு வருகிறது.*Mullaperiyar Police* என்கிற பெயரில் குமுளி சாலையில் ஏதேனும் பொலிரோ வண்டிகளை கண்டால், அது முல்லைப் பெரியாறு அணையில் இருக்கும் காவல் நிலைய வண்டி என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
ஒரு டிஎஸ்பி, 3 இன்ஸ்பெக்டர்கள், ஆறு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 124 காவலர்களை கொண்ட மிகப்பெரிய காவல் நிலையமாக முல்லைப் பெரியாறு அணையிலுள்ள கேரள காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் தமிழக அரசு கொடுக்கும் ஒரு கோடி ரூபாய் சம்பளம், 5+1 என்கிற அளவிலான கேரள காவலர்களுக்கு மட்டுமே. அதாவது ஐந்து காவலர்கள் மற்றும் ஒரு ஹெட் கான்ஸ்டபிள் எண்ணிக்கைக்கு மட்டுமே.
மீதமுள்ள கேரள காவல் அதிகாரிகள் தொட்டு, காவலர்கள் வரை இருக்கக்கூடியவர்களுக்கான சம்பளத்தை கொடுப்பது கேரள மாநில அரசு.
வெறும் ஆறு காவலர்களுக்கு நாம் ஒரு கோடி கொடுக்கிறோம் என்றால், டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும்,அங்கு இருக்கக்கூடிய காவலர்களுக்கும் கேரள மாநில அரசு ஆண்டுதோறும் கொடுக்கும் சம்பளம் கிட்டத்தட்ட 12 கோடியை தாண்டுகிறது.
2016 க்கு முன்பு வரை வெறும் கேம்ப் ஆக செயல்பட்டு வந்த முல்லைப் பெரியாறு அணையில் உள்ள கேரள காவல் நிலையம், இந்த அளவு விரிவுபடுத்தப்பட்டதற்கு பின்னால் ஏதாவது ஒரு தேவை இருக்கும் அல்லவா...!!!
இவ்வளவு காவலர்களை ஒரு அணையில் குவிக்கும் அளவிற்கு இதுவரை அங்கே எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. விதிவிலக்கு 2000 ஆண்டில் நடந்த சம்பவம்.
இவர்கள் போக கேரள வனத்துறை சார்பில் ஒரு Forestor மற்றும் நான்கு Guard கள் பணியில் இருக்கிறார்கள் அவர்களுக்கும் கேரள அரசு ஆண்டுதோறும் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாயை சம்பளமாக கொடுத்து வருகிறது.
இந்தியாவில் வேறு எந்த அணைக்கும் இவ்வளவு பெரிய பாதுகாப்பு கிடையாது. அவ்வப்போது அனாமதேயமாக மெயில் மூலமாக வரும் வெடிகுண்டு மிரட்டல்களை தவிர, நேரடியாக அணைக்கு எந்த தீவிரவாத அச்சுறுத்தலும் இல்லை.
பிறகு ஏன் இவ்வளவு பாதுகாப்பு என்பதில்தான் நமக்கு சந்தேகங்கள் எழுகிறது. கேரள மாநில அரசுக்கு பெரிய அளவிற்கு லாபம் கொடுக்காத ஒரு அணைக்கு ஆண்டு தோறும் 13+1 கோடி ரூபாய் செலவழிக்கிறார்கள் என்றால், அதற்குப் பின்னால் எது இருக்கிறது என்பதுதான் நமது கேள்வி.
இவ்வளவு படையை கேரள மாநில அரசு முல்லைப் பெரியாறு அணையில் இறக்கி வைத்திருக்க, தமிழகத்தின் சார்பில் அணையில் தங்கி இருந்து பணி செய்யக்கூடிய எவரும் அங்கு செல்வதில்லை என்பதோடு, வாங்கும் சம்பளத்தில் இந்த அணையில் பணி செய்வதற்காக 7000 ரூபாய் அதிகம் சம்பளமாகப் பெறுகிறார்கள் என்பது வெட்கக்கேடு.
ராஜகோபால்- மகேந்திரன் மற்றும் செல்வகுமார் ஆகிய மூவருக்கும் இந்த அணையில் பணி செய்வதற்காகவே வழங்கப்படுகிறது சிறப்பு ஊதியமான 7000 ரூபாய். சதலத்தில் ஒரு பொறியாளர் வாங்க கூடிய சம்பளத்தை விட நாம் 7000 ரூபாய் அதிகமாக வாங்குகிறோமே என்கிற எந்த உறுத்தலும் இன்றி, இவர்கள் தங்களுடைய சொந்த வேலையை பார்ப்பதுதான் வேதனையாக இருக்கிறது.
மாதத்திற்கு ஒருமுறை கூட அணைக்குச் செல்ல விருப்பமில்லாத செயற்பொறியாளர், பருவமழை ஜூன் ஒன்றாம் தேதியே தொடங்கிவிட்ட நிலையில், நேற்றுதான் வேறு வழியின்றி அணைக்குச் சென்று இருக்கிறார்.
அணையில் தங்கி இருக்க வேண்டிய தற்காலிக பணியாளர்கள் 9 பேர்,எஸ் டி ஓ ராஜகோபால், பொறியாளர்கள் செல்லக்குமார்-தினேஷ் ஆகியோர் ஜோன் ஒன்றாம் தேதிக்கு பிறகு எத்தனை நாட்கள் அணையில் தங்கி இருந்திருக்கிறார்கள் என்று தெரிய வேண்டும். இதில் செல்லக்குமார் நேற்றுதான் அணைக்கு சென்றிருக்கிறார்.இன்று வந்து விடுவார் என்று நினைக்கிறேன்.
முழுக்க முழுக்க தமிழகம் மட்டுமே பயன்பெற்று வரும் ஒரு அணையை பாதுகாப்பதில், நமக்கு இல்லாத அக்கறை கேரளாவிற்கு எதற்காக இருக்கிறது என்கிற செய்தியை யாவது உள்வாங்க கூடிய அறிவு படைத்தவர்கள் நம்முடைய பொறியாளர்கள் என்றால், கிட்டத்தட்ட அத்தனை பேரும் அணையில் இருந்திருப்பார்கள்.
ஆனால் உணர்வற்ற, சம்பளம் மட்டுமே பெறும் ஒரு அதிகாரியாக இவர்கள் இருப்பதால்தான் இவர்களை கேள்வி கேட்கிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment