Tuesday, April 30, 2019

#ஓட்டப்பிடாரம் தொகுதி மக்களின் #கோரிக்கைகள்

1. வ.உ.சிதம்பரனார் வழக்கறிஞராக பணியாற்றிய ஓட்டப்பிடாரம் நீதிமன்றக் கட்டடம் பாழடைந்து போய் இடிந்தநிலையில் காணப்படுகிறது. இப்போது நீதிமன்றம் இங்கு இல்லை. மூன்று பேருந்துகள் மாறி விளாத்திகுளம் செல்ல வேண்டும். ஓட்டப்பிடாரத்தில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாளைய கோரிக்கை.
2. தூத்துக்குடி, கோவில்பட்டி, திருநெல்வேலி போன்ற பெருநகரங்களை இணைக்கும் போக்குவரத்து வசதிகள் மிகவும் குறைவு. 25 கிலோ மீட்டர் தொலைவு மட்டுமே நகரப்பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்ற விதி இருப்பதால் பெருநகரங்களில் இருந்து 40 கி.மீ.தூரத்தில் உள்ள கிராமங்களுக்கு போக்குவரத்து வசதிகள் கிடையாது. அதனால் ஓட்டப்பிடாரத்தை தலைமையிடமாகக் கொண்டு போக்குவரத்து பணிமனை அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை.
3. ஸ்டெர்லைட், கோஸ்டல் எனெர்ஜென், விவி டைட்டானியம், இந்த் பாரத், நிலா சீ புட்ஸ், டயமண்ட் சீ புட்ஸ் உள்ளிட்ட தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி, மூன்று அனல் மின் நிலையங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட காற்றாலைகள் ஓட்டப்பிடாரம் தொகுதியில் அமைந்துள்ளன. உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில்லை. கோவை, திருப்பூர், சென்னையில் இளைஞர்கள் வேலை தேடி செல்கின்றனர். தொழில் நிறுவனங்களில் 90 விழுக்காடு உள்ளூர் மக்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பது கோரிக்கை.
4. சூழல் சீர்கேட்டை உண்டாக்கிய ஸ்டெர்லைட் ஆலையை சிறப்பு சட்டம் இயற்றி நிரந்தரமாக மூட வேண்டும், ஒரே தாலுகாவில் நெருக்கமாக சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் ஆலைகள் அமைக்கக் கூடாது. இப்போது உள்ள ஆலைகள் தீவிர கண்காணிப்பிற்கு உள்ளாக்க வேண்டும்.
5. புதியம்புத்தூர் பகுதியில் ஆயத்த ஆடை தொழில் பிரபலமாக இருந்தது, இப்போது நலிந்து வருகிறது. கோவை, சென்னை, கேரளா உள்ளிட்ட வெளியூர்களுக்கு ஆயத்த ஆடைகள் தயாரித்து அனுப்புகின்றனர். ஆயத்த ஆடை தொழிற்பூங்கா ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர் பகுதியில் அமைக்க வேண்டும் என்பது பல நாள் கோரிக்கை. ஜவுளிப்பொருட்களை எடுத்துச் செல்ல, புதியம்புத்தூரில் இருந்து கோவை, சென்னைக்கு அரசுப் பேருந்து வசதி செய்து தரவேண்டும் என்பது ஒரு கோரிக்கை. புதியம்புத்தூர் - மணியாச்சி ரயில் நிலைய தொடர்பை ஏற்படுத்த வேண்டும்.
6. மாப்பிள்ளையூரணி, தாளமுத்துநகர், பண்டாரம்பட்டி, குறிஞ்சிநகர் பகுதிகளின் குடிநீர் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளது. ஒரு குடம் 5 ரூபாய், 10 ரூபாய் என்று விலை கொடுத்து வாங்கும் நிலைதான் உள்ளது. ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி ஒன்றியத்தின் பல கிராமங்களில் குடிநீர் பிரச்சனை பெரும் பிரச்சனை. நிரந்த திட்டங்களோ, தீர்வுகளோ இல்லை.
7. பேய்க்குளம், அத்திமரப்பட்டி, குலையன்கரிசல், கூட்டாம்புளி, கோரம்பள்ளம் பகுதி தாமிரபரணி வரத்துக் கால்வாய் தூர்வாரப்பட வேண்டும், இருபோக விவசாயத்திற்கும் உரிய காலத்தில் தண்ணீர் விட வேண்டும், கோரம்பள்ளம் குளத்தில் எல்லா காலத்தில் நீர் தேக்கி வைத்து, படகுப் போக்குவரத்து சுற்றுலாவாக அமைக்க வேண்டும், முறப்பநாடு பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும் உள்ளிட்டவை தாமிரபரணி சார்ந்த கோரிக்கைகள்.
Image may contain: outdoor
8. தாமிரபரணி நதியில் கடனா கல்லாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நெல்லை மாவட்டத்தில் ஆழ்வார்குறிச்சிக்கு மேற்கே உள்ள கடனா அணை மூலமாக அரசபத்து கால்வாய், குருவபத்து, வடகுருவபத்து, ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர், மஞ்சள்புளிகால், காக்கநல்லூர் கால்வாய், காங்கேயன் கால்வாய் ஆகிய 8 கால்வாய்கள் மூலம் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பிலான விளைநிலங்கள் பயிரிடப்படுகிறது.
இந்த அணையிலிருந்து கிளம்பும் காங்கேயம் கால்வாய் மூலம் பாப்பாக்குடி, இடைக்கால், அடைச்சாணி, முக்கூடல், அரியநாயகிபுரம், சங்கந்திரடு, கல்லூர் வரையுள்ள பகுதிகள் பாசனம் பெருகின்றன. அதிக வெள்ளம் வரும் காலங்களில் காங்கேயன் கால்வாயில் இருந்து மேட்டுக்கால்வாய் அமைத்து ஓட்டப்பிடாரத்துக்கு நீர் கொண்டுசெல்லும் புதிய திட்டம்தான் அது.
இதன்மூலம் கங்கைகொண்டான் அருகே சிற்றாறும், கயத்தாறு அருகே உப்போடையும் குறுக்குச்சாலை அருகே கல்லாறும் இணைக்கப்படும். எப்போதும்வென்றான் அருகே வைப்பாறும் இணைக்கப்படும். அதாவது விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் தூத்துக்குடி, திருநெல்வேலி இரண்டு மாவட்டங்களும் செழிப்பாகும் தொலைநோக்கு திட்டம்தான் அது.

9. தூத்துக்குடி புதுக்கோட்டை பகுதியில் உப்பாற்று ஓடையில் கழிவுகள் கொட்டக் கூடாது, உப்பாற்று ஓடையின் ஆக்கிரமிப்புகள் ஆரைக்குளம் அணைக்கட்டில் இருந்து அத்திமரப்பட்டி அணைக்கட்டு வரை இருக்கின்றன. முழுமையாக ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும், இடைப்பட்ட கொம்பாடி அருகே மறிச்சுக்கட்டி என்ற இடத்தில் தடுப்பணை கட்ட வேண்டும் என்பதும் ஒரு கோரிக்கை.
உப்பாற்று ஓடையில் இருந்து புதியம்புத்தூர் மலர்குளம், ஓட்டப்பிடாரம் பெரியகுளம் பகுதிகளுக்கு நீர்வரத்துக்கான கால்வாய்களை சீரமைத்திடவும் நீண்டநாள் கோரிக்கை உள்ளது.

10. ஓட்டப்பிடாரம், கவர்னகிரி, புதியம்புத்தூர், குலசேகரநல்லூர், வல்லநாடு, புதுக்கோட்டை, அல்லிகுளம், கோரம்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆழ்துளை கிணறுகள் அமைத்தும், விவசாய கிணறுகளில் இருந்தும் தொழிற்சாலைகளுக்கு அதிகளவில் லாரிகளில் நீர் எடுத்துச் செல்லப்படுகிறது. நிலத்தடி நீர் கொள்ளை அதிகமானதால் அப்பகுதியின் நிலத்தடி நீர் படுபாதாளத்திற்கு சென்றுவிட்டது. இதனைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
11. ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர், புதுக்கோட்டை, வல்லநாடு பேரூராட்சி உருவாக்க வேண்டும் என்பது ஒரு கோரிக்கை.
ஓட்டப்பிடாரத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும், அரசு தொழில்நுட்ப கல்லூரி அமைக்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் பல ஆண்டுகால கோரிக்கை.

12. தூத்துக்குடி தொழில்வளம் மிகுந்த நகரம், இங்கிருந்து சென்னைக்குச் செல்ல ஒரே ஒரு ரயில் மட்டுமே உள்ளது, அதனால் தூத்துக்குடி – மீளவிட்டான் – மணியாச்சி பகுதிகளை இணைக்கும் இருவழிச்சாலை அமைக்கும் திட்டம் கிடப்பில் உள்ளது. அதனை செயல்படுத்தினால் தூத்துக்குடி நகரில் இருந்து மணியாச்சி ரயில் நிலையத்திற்கு நேரடி தொடர்பு கிடைக்கும்.
13. கோவில்பட்டி – காமநாயக்கன்பட்டி – பசுவந்தனை – ஓசநூத்து – கைலாசபுரம் – புதுக்கோட்டை – குரும்பூர் – திருச்செந்தூர் இருவழிசாலை அமைக்கும் திட்டம் கிடப்பில் உள்ளது. இந்தப் பாதையில்தான் இப்போது திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர். கொற்கை துறைமுகத்தோடு தொடர்பு கொண்ட வண்டிப்பாதை என்றும் சொல்கின்றனர். இந்த மாநிலநெடுஞ்சாலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் இப்பகுதியில் தொழில் வளம் பெருகும், கோவில்பட்டி திருச்செந்தூர் பயண நேரம் குறையும்.
14. புதியம்புத்தூர் -ஓட்டப்பிடாரம் - குலசேகரநல்லூர் - ஒட்டநத்தம் - கயத்தார் இணைப்பு மாநில நெடுஞ்சாலை, பேருந்து வசதி.
சில்லாங்குளம் - ஒட்டநத்தம் - சீவலப்பேரி - பாளையங்கோட்டை பேருந்து வசதி.

15. வெள்ளப்பட்டி, தருவைக்குளம் பகுதியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், அனல்மின்நிலையம், மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் மூலமாக மீன்வளம் குறைந்து விட்டது. மீனவர் நலனுக்கான திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுவிட்டன. மீனவர்களுக்கு சிறப்புத் திட்டங்கள் தேவை.
16. தட்டாப்பாறை பகுதியில் செயல்பட்டு வந்த சிறுவர் சீர்திருத்த பள்ளி இடமாற்றம் செய்யப்பட்டு விட்டது. அந்த இடத்தில் தொழிற்பயிற்சி கூடம் அமைத்து மாணவர்கள், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெருக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கை.
Image may contain: plant, sky, grass, flower, outdoor and nature
17. தூத்துக்குடி – மதுரை இண்டஸ்டிரியல் காரிடார் திட்டத்தில், சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத வேலைவாய்ப்பை உருவாக்கும் தொழில் நிறுவனங்களை, தற்சார்பு உற்பத்தி தொழில்களை கொண்டு வர வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை.
18. வல்லநாடு, மணக்கரை, அத்திமரப்பட்டி, கோரம்பள்ளம் பகுதிகளில் தாமிரபரணி விவசாயம் நடந்தாலும், மானாவாரி விவசாயம் அதிகம் உள்ள பகுதி விளைபொருட்களுக்கு உரிய விலை இல்லாமல், தொழிற்சாலைகள், காற்றாலைகள் வருகையால் விவசாய நிலங்கள் சுருங்கி விட்டன. இடம்பெயர்தல் அதிகம் நடந்துள்ள தொகுதி. கம்பு, சோளம், கடலை, பருத்தி, மிளகாய், நெல், வாழை, பூ விவசாயம் மேம்படுத்த வேண்டும்.
19. ஓட்டப்பிடாரம், புதுக்கோட்டை, ஒட்டநத்தம், மாப்பிள்ளையூரணி பகுதி அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்த வேண்டும், 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருக்க வேண்டும், 108 ஆம்புலன்ஸ் சேவை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது ஒரு கோரிக்கை.
20. ஓட்டப்பிடாரம், பரிவில்லிகோட்டை, காசிலிங்கபுரம், வல்லநாடு, குலையன்கரிசல் அரசுப் பள்ளிகள் மேம்படுத்தப்பட வேண்டும், அரசு மாணவ, மாணவியர் விடுதிகள் தரம் உயர்த்த வேண்டும் என்பது கோரிக்கை. அங்கன்வாடி மையங்கள் சிறப்புத் திட்டத்தில் சீரமைக்கப்பட வேண்டும். பரிவில்லிகோட்டை ஆசிரியர் பயிற்சி மையம் தொழிற்பயிற்சி கூடமாக மாற்ற வேண்டும்.
21. தரமற்ற முறையில் கட்டப்பட்ட தருவைக்குளம் சமத்துவபுரம், தொகுதியின் பல்வேறு இடங்களில் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள், காலனி வீடுகள் இடிந்து மோசமான நிலையில் குடியிருக்க முடியாத நிலையில் உள்ளன. அவற்றை சீரமைத்து வறுமையில் உள்ள அனைவருக்கும் தரமான குடியிருப்பு வசதிகள் செய்து தர வேண்டும் என்பது கோரிக்கை.
Image may contain: one or more people, cloud, grass, sky, outdoor and nature
22. முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் உதவித்தொகை கிடைக்க வேண்டும் என்றும், வீட்டுமனைப் பட்டா வேண்டியும் ஆயிரக்கணக்கான மனுக்கள் கொடுத்து வருகின்றனர் பொதுமக்கள்.
23. வ.உ.சிதம்பரனாருக்கு சொந்த ஊரான ஓட்டப்பிடாரத்தில் நினைவு மணிமண்டபம் அமைக்க வேண்டும். அதில் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நூலகம், போட்டித்தேர்வு பயிற்சி மையம், காவலர் பயிற்சி வழங்க வேண்டும் என்பது கோரிக்கை.
Image may contain: sky, house, tree, outdoor and nature
24. வீரன் சுந்தரலிங்கம், அவரது மனைவி வடிவு இருவரும் ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கில் முதன்முதலாக தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய அதே இடத்தில் நினைவு மண்டபம் அமைத்து, தொல்லியல் துறை மூலம் பராமரிக்க வேண்டும். பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டை, வல்லநாடு வெள்ளையத்தேவன் மணிமண்டபம் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக மாற்ற வேண்டும்.
Image may contain: train, sky and outdoor
ஆங்கிலேயர்கள் கல்லறை அமைந்துள்ள கவர்னகிரி பகுதியில் கோட்டைச்சுவர் அமைத்து, சுற்றுலா துறை, தொல்லியல் துறை சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.

25. சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த வல்லநாடு வெளிமான் உய்விடம், சாலிகுளம் காப்புக்காடு, மயூரா தோட்டம் உள்ளிட்ட இடங்கள் சிறப்புக் கவனம் செலுத்தி பாதுகாப்பதோடு, சுற்றுலா மேம்பாடு செய்ய வேண்டும்.

To Lead People, Walk Behind them.

No photo description available.

எரிவதென்பது இலங்கையின் சாபம் போலும் வேறென்ன சொல்ல.

*எரிவதென்பது இலங்கையின் சாபம் போலும் வேறென்ன சொல்ல.*
அப்படித்தான் ஈழம் இலங்கையில் இருக்கிறது என்ற ஈழச்சகோதரியின் பதிவைப் பாரீர்.
விதியே, விதியே, தமிழ்சாதியே!

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
29-04-2019

#இலங்கையில் ஒரு சிக்கலான தருணத்தில்,மனம் எவ்வளவு வேதனைபடும்,
உளைச்சல் ஆகும் என்பதை அறியமுடிகிறது, ஈழத்து தங்கை Sharmila Vinothini Thirunavukarasuயின் பதிவுகள்

யுத்தம் முடிந்து,
மொத்தமும்
வேறு திசையில் பயணிக்கலாம்
என்று நினைக்கையில்,
திடீரென
பெரும் அவல சப்தம்,
நெஞ்சு பிளக்கிறது,

மனிதநேயமற்ற மனிதர்கள் மத்தியில் எப்படித்தான் வாழ்கிறீரோ…?
திடமாக இருங்கள்......
**************

ஏன் எங்கள் வாழ்வு இப்படி மாறிப்போய்விட்டது? யுத்தம் கருக்கொண்டு உருக்கொள்ளும் காலத்தில் பிறந்து சதா யுத்த வலயங்களில் உழன்று கந்தக் காற்றுக்கு கதை சொல்லும் காலத்தை எங்களுக்குள் திணித்தவர் யார்?
Image may contain: cloud, outdoor, water and natureஅதிரடிப்படைகளின் முகத்தை சும்மாவே பார்க்கப்பிடிக்காது, யுத்த காலத்தில் அவர்கள் செய்த அட்டூளியங்கள் அப்படி. இப்போது மீண்டும் அவர்களுக்குரிய காலம் அதுவும் முகத்தை உர் என்று படு பயங்கரமாக வைத்தபடி ஏதிலிகளிடம்தான் அவர்களுக்கு தங்களது வீரத்தைக் காட்டத்தெரியும்.
யுத்தகாலத்திலும் இப்படித்தான் ஒரு கிலோ மீற்றர் தூரம் பயணப்படுவதற்குள் ஒன்பது சோதனைச்சாவடிகளைக் கடக்க வைப்பார்கள். இறங்கு, ஐடி இருக்கா? எங்க போறாய்? இப்படி ஒருமையில் தரக்குறைவாக வந்து விழும் ஆயிரத்தெட்டுக் கேள்விகளால் வந்த எரிச்சலால் சிங்களத்தின்மீதுகூட அப்படி ஒரு வெறுப்புத் தொற்றிக்கொண்டது, அந்த வெறுப்பால் நீண்ட நாட்களாக அலுவலகத்தில் கூட ஒரு வார்த்தை தட்டுத்தவறி சிங்களத்தில் கதைத்துவிடக்கூடாது என்று மிகக் கவனமாக இருந்தேன். அதுவும் ஒரு மொழிதானே மொழி மீது நமக்கென்ன கோபம் என்ற புரிதல் வர நீண்ட நாட்கள் எடுத்தது.
ஆனால் இப்போது மீண்டும் அதே நிலை, 
காலையில் 6.15 கு பேருந்து எடுக்க வேண்டும், 5.45 கு வீட்டை விட்டு முச்சக்கர வண்டியில் புறப்பட்டுவிட்டேன். வீட்டை விட்டு புறப்பட்டு இரண்டு தெரு கடந்திருப்பேன் முன்னால் துப்பாக்கிகளை லோட் பண்ணிய படி அதிரடிப்படைக் குவியல் முச்சக்கரவண்டியை மறித்தது, முன்பு நான் வெறுத்த அதே வார்த்தைகள், சகித்துக்கொண்டு ஐடி யை நீட்டினேன், பார்த்து விட்டு ஓகே நீங்க இறங்கிப்போங்க முச்சக்கர வண்டியை சோதித்துவிட்டுத்தான் அனுப்ப முடியும் என்றனர். ஒரு வாறு கதைத்து வேறு தெருவால் போகலாம் என்றால் அங்கும் அதே நிலை. கடைசியில் வேறு வழியின்றி சிவனே என்று நடந்து வந்து பேருந்தில் ஏறி அமர ஓட்டோ அண்ணாவின் அழைப்பு 'பஸ் எடுத்திற்றீங்களா?' 'ஓம் அண்ணா நீங்க போய்ரீங்களா வீட்ட? ஓம்..
---------------------------------
வாழ்வு குரூரமாக்கப்பட்ட காலத்தில் 
ஏதுமறியாதவொரு நத்தையைப் போல 
வாழப் பணிக்கப்பட்ட சாபத்தைச் 
சுமந்தபடி நடக்கிறேன் 
ஆழ் சமுத்திரமொன்றினுள் 
மறைந்திருக்கின்ற நீரோட்டத்தைப்போல..
உடல் கிழித்துக் குருதி குடித்த 
கழுகுகளின் வலிய நகங்கள் 
கூர்மையிழந்து 
ஒடிந்து விழுவதற்கு முன்னம் 
மீண்டுமோர் பிணவாடை நாசியைத் துளைத்து 
முகம் வாடச்செய்யும் இக் காலத்தை 
சபிப்பதைத் தவிர 
வேறென்ன செய்ய?

என்ன செய்தது இச் சிறு தீவு?
அதில் சாம்பல் மேடுகளைத் தூவாமல் 
தயவுகூர்ந்து தள்ளிப் போய்விடுங்கள் 
பூகோளம் பேசவும் பெருவணிகம் செய்யவும் 
இந்நிலத்தின் சனங்களை 
இனாமாக்கி விடாமல் 
விட்டுவிட்டுப் போய்விடுங்கள் 
வாழட்டும் இத்தீவு.

இந்த மந்திரிகளை எந்திரி என்றால் காணாமல் போய் விடுவார்கள். அதுவரை இவர்களின் தறுதலை ஆட்டங்கள்.என்ன செய்ய?

இந்த மந்திரிகளை எந்திரி என்றால் காணமல் போய் விடுவார்கள். அது வரை இவர்களின் தறுதலை ஆட்டங்கள்.என்ன செய்ய? 

————————————————-

நேற்று ஒட்டப்பிடாரம் தொகுதியில் இடைத்தேர்தல் பிரச்சார பணிகளை மேற்கொண்ட போது, அங்கு சந்தித்த நண்பர்கள் என்ன அண்ணாச்சி ஓட்டு கேட்க வந்து இருக்கீங்க, அதிமுக அமைச்சர் 70 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என அமைச்சரே சொல்லி இருக்காரு இதுக்கு அப்புறம் நீங்க எல்லாம் ஓட்டு கேட்கணுமா? என சிரித்தவாறே கேலியாகப் பேசினார்கள்.

சற்று பின்னோக்கி நினைத்துப் பார்க்கின்றேன். காமராஜர் பிறந்த விருதுநகர் மாவட்டத்தில் ராஜேந்திர பாலாஜி என்ற அமைச்சர் இருக்கின்றாராம். நானும் அதே பகுதியில் அரசியல் பயணம் மேற்கொண்டுள்ள பல பணிகளை செய்துள்ளேன். அப்போதெல்லாம் இப்படி ஒரு பெயரை கேள்விப்பட்டதே இல்லை.
Image may contain: 1 person
கடந்த 2000ஆம் ஆண்டு வரை இன்னும் சொல்லப்போனால் துணை முதல்வராக இருக்கின்ற பன்னீர்செல்வம் கூட நாங்கள் அறிந்தது இல்லை. திடீரென 2001ல்உயர்நத பதவிகள்; தமிழக மக்களுக்கு சரியான வகையில் அறியா ஒருவர் வரலாற்றில் முதன் முறையாக பெரிய ஆளுமையன தலைவர்கள் அமர்ந்த முதலமைச்சர் நாற்காலியில் பண்ணீர்செல்வம் அமர்ந்த கேவலமான நிலை ஏற்ப்பட்டது. அப்படித்தான் இந்த ராஜேந்திர பாலாஜி, இவரை பற்றி எங்கள் பகுதியில் 9ஆண்டுகளுக்கு யாருக்கும் தெரியாது. எந்த பொது வாழ்வு தியாகம் இல்லாமல் என்ன பேசுகிறோம் சற்று கூச்சம் இல்லாமல் இவர் பேசுகிறார். இந்த வட்டாரத்தில்
எங்களை போன்றவர்கள் 1972லிருந்து அரசியலில் இப்படி வந்தவர்கள் போனவர்களை பார்த்து கொண்டுதான் உள்ளோம். இந்த மந்திரிகளை எந்திரி என்றால் காணாமல் போய் விடுவார்கள். அது வரை இவர்களின் தறுதலை ஆட்டங்கள்.என்ன செய்ய?

அந்த காலகட்டத்தில் வைகோ அவர்கள் சிவகாசி தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது நான் முக்கிய பணிகளை ஆற்றினேன் அப்பொழுது கூட ராஜேந்திர பாலாஜி பெயரை நான் கேள்விப்பட்டது இல்லை. இவர்கள் சொல்வதை எல்லாம் பத்திரிக்கைகளும் கூச்சநாச்சமின்றி அப்படியே பதிவிடுகின்றனர். சமூக ஊடங்களில் அது குறித்த பேச்சுக்கள் எழுந்து, ஆயிரக்கணக்கானவர்களின் நேரம் விரயமாகின்றது. அமைச்சர்தான் பொறுப்புடன் செயல்பட வில்லை என்றாலும் இந்த பத்திரிகையாவது கொஞ்சம் பொறு ப்புடன் செயல்பட்டு இருக்கலாம்.
நான் அறிந்த வரையில் விருதுநகர் மாவட்டம் என்றால் திமுகவில் எஸ்.எஸ்.தென்னரசு பெ.சீனிவாசன். சத்தியேந்திரன்,முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் தந்தையார் தங்கபாண்டியன் காங்கிரஸில் எஸ்.ஆர்.நாயுடு, ரா.கிருஷ்ணசாமி நாயுடு, முன்னாள் அமைச்சர் பாகநேரி ஆர்.வி.சவாமிநாதன் அவர்கள், ப.சிதம்பரம் ராஜபாளையம் அன்னமராஜா, ஸ்ரீரங்கராஜா , முன்னாள் சட்டமன்ற தலைவர் காளிமுத்து கம்யூனிஸ்ட் வத்தாரயிருப்பு அழகர்சாமி எனப்பலர். இவர்களுக்கெல்லாம் நீண்ட நெடியதொரு வரலாறு ஒன்றுபட்ட இராமநாதபுரம் மாவட்டத்திற்கு உண்டு. அதனை புரட்டினால் மொழி, இனம், சமூகநீதி போராட்டங்கள் என தழும்புகள் வரிவரிகளாக இருக்கும். ஆனால் இப்பொழுது இருக்கும் அதிமுக அமைச்சர்களுக்கு அமைச்சர்கள் என்ற ஸ்டிக்கர் மட்டுமே உண்டு. அதற்கான எந்த தகுதியும் இருப்பதாக அவர்களின் பேச்சினில் செயல்பாட்டில் தெரிவதில்லை. இதனை எல்லாம் நினைத்தால் வெட்கி தலைகுனிய வேண்டியதாக இருக்கின்றது.
ஒன்றுபட்ட நெல்லை மாவட்டம் என்றால் காங்கிரஸில் செல்லபாண்டியன், மஜீத், திராவிட இயக்கங்களில் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த ரத்னவேல் பாண்டியன், மதிமுக பொதுச் செயலர் வைகோ, தினகரன், கே.பி.கந்தசாமி, கருப்பசாமி பாண்டியன், ஜி.ஆர்.எட்மன்ட், கம்யூனிஸ்ட் இயக்கங்களில் சோ.அழகிரிசாமி, நல்லசிவன், நல்லகண்ணு மற்றும் காயிதேமில்லத் என பல நெடிய வரலாறு கொண்டவர்கள் அரசியல் வரலாறு அறிந்தவர்கள், வரலாற்றில் இடம் பிடித்தவர்கள். தங்களுடைய கருத்தை நாகரிகமாகவும், தவறில்லாமாலும் முன்வைக்க தவறாதவர்கள்.
இன்றைக்கும் அதிமுக அமைச்சர்கள் இருக்கின்றார்களே இவர்களை பற்றி அண்டை மாநில நண்பர்களுடன் ஏதாவது பேச முடியுமா? அல்லது அவர்களைப் பற்றி கேட்டால் வெட்கப்பட வேண்டியதாக இருக்கின்றது. தெர்மாகோல் செல்லூர் ராஜு, பெண்கள் அதிகமாக ஷாம்பு போட்டு குளித்தால் நநிநீர் நுரையாக வருகின்றது என்று கூறிய கருப்பண்ணன் போன்ற அமைச்சர்கள் எல்லாம் வைத்துக்கொண்டு என்ன சொல்ல முடியும்?
அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம் தடை இல்லை ஆனால் தான்தோன்றித்தனமாக பேசுவது ஏற்றுக்கொள்ள இயலாது அல்லவா?

பண்டித நேரு பிரதமராக இருந்தபோது நாட்டிற்கு ஏதாவது சிக்கல் வந்தாலும் குழப்பம் ஏற்பட்டாலும் முடிவெடுப்பதற்கு முன் மூதறிஞர் ராஜாஜி என்ன சொல்கின்றார்? ஓமந்தூரார் என்ன கருத்துரைக்கின்றனர்? பெரியார் என்ன சொல்கின்றார், அண்ணாவின் கருத்து என்ன? என்றெல்லாம் தமிழகத்தின் கருத்தறிந்து இவர்களின் ஆலோசனைகளை பெற்று அரசியல் செய்ததுண்டு. இன்னும் சொல்ல போனால் இந்திரா காந்தி அவர்கள் பிரதமராக இருந்த காலத்தில் காலகட்டத்திலும் கலைஞர் என்ன சொல்கின்றார் பி.இராமமூர்த்தி என்ன சொல்கின்றார் என கருத்தறிந்து அவர்களின் கருத்துக்களை உள்வாங்கி செயல்பட்டார். இப்படியாக இருந்த இந்த தமிழகத்தின் தமிழகத்தின் மாண்புகளை அதிமுக-அமைச்சர்கள் அடித்து நொறுக்கி சிதைத்து விட்டனர்.
இந்த ராஜேந்திர பாலாஜிக்கு ஜனநாயகம் என்றால் என்னவென்று தெரியுமா குடியரசு என்றால் என்னவென்று தெரியுமா? கிரேக்கத்தில் பிறந்தது ஜனநாயகம் என்பதாவது தெரியுமா, இத்தாலியில் தோன்றியது குடியரசு என்பதாவது தெரியுமா? ஒட்டப்பிடாரத்தில் எத்தனை வாக்குகள் உள்ளது என்பதே தெரியாத ராஜேந்திர பாலாஜியிடம் நான் ஐந்து கேள்விகளை முன் வைக்கின்றேன். யாருடைய உதவியும் இன்றி அவரால் பதிலளிக்க முடியுமா?
1) நேருவின் அணிசேராக் கொள்கை என்றால் என்ன?
2) பஞ்சசீல கொள்கைகள் யாவை?
3) இந்தியா மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டதன் போராட்ட வரலாறு என்ன?
4) இந்தியாவின் நதிகளை இணைக்க 30 ஆண்டுகாலம் போராடினேனே அந்த வழக்குகள் சந்தித்த பிரச்சினைகள் என்ன என்பது தெரியுமா?
5) கச்சத்தீவு பிரச்சனைகளை சொல்ல முடியுமா? இவற்றையெல்லாம் விடுங்கள் அவருடைய பகுதிக்கு அருகிலுள்ள ஆலங்குளம் அரசு சிமெண்ட் ஆலை போராட்டமும் உயர் நீதிமன்றத்தை அணுகி ஆணை பெற்று அந்த ஆலையை நவீனப்படுத்த உத்தரவு பெற்றேனே என்பது தெரியுமா?
அரசியலை ஆழப்புரிந்தவர்கள், ஆர்வமாக வாசித்தவர்கள் இங்கு ஏராளம். இவர்களை எல்லாம் பார்த்து என் போன்றவர்களின் இதயம் ரணமாகியிருக்கின்றது. பெரியார் கூறியதைப் போல நெஞ்சில் குத்திய முள் போல இவர்களை எல்லாம் பார்த்து வேதனை அடைகின்றோம்.
ஒரு கிராமம் அலுவலர் பதவிக்கு சென்றால் கூட நேர்காணல் என நிறைய கேள்விகளை கேட்கிறார்கள் ஆனால் அமைச்சராக வருவதற்கு எந்த தகுதியும் தேவையில்லை. இதனால் தான் என்னவோ இப்படிப்பட்ட முட்டாள்கள் எல்லாம் அமைச்சர் ஆகிவிட்டார்கள்.
Image may contain: 2 people, people standing, wedding and indoor
இந்தியாவின் வடநாட்டில் உள்ள மாநிலங்களை ஒப்பிட்டால் தமிழகம் மெத்த படித்த மாநிலம். அறிஞர்களையும் திறமையான அமைச்சர்களையும் விஞ்ஞானிகளையும் பொறியாளர்களையும் மருத்துவர்களையும் பெற்ற மாநிலம். இப்படிப்பட்ட மாநிலத்திலிருந்து அடிமுட்டாள்தனமான அமைச்சர்களை என்று என்னால் எளிதில் போக முடியவில்லை. இந்த அறிவிலிகள் விரட்டியடிக்கப்பட வேண்டும் களங்கம் துடைக்கப்பட வேண்டும். தமிழகத்தில் பிறந்து விட்டோம் இதை எளியதாக கடந்து செல்ல முடியாது. 

#பொதுவாழ்வு
#அரசியல்
#ஒட்டப்பிடாரம்_இடைத்தேர்தல்
#KSRadhakrishnanpostings
#KSRpostings
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
29-04-2019

ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தல்

இன்று (29.04.2019) ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தல் குறித்த அடிப்படை களப்பணிகளும், வாக்கு சேகரிப்பு பணியும் ஆற்றினோம், வடக்கு ஆரைக்குளம், தெற்கு ஆரைக்குளம்,
குலசேகரநல்லூர், முரம்பன், சங்கம்பட்டி மற்றும் ஒட்டநத்தம் உள்ளிட்ட கிரமங்களுக்குச் சென்றோம்.

இந்த கிராமங்களின் பொதுத் தேவைகளான சாலைவசதி, குடிநீர் வசதி, ரேசன் கடை போன்ற அத்யாவசிய தேவைகளை மக்கள் வலியுறுத்தினார்கள்.அவ்வப்போது கிராமங்களின் தேவைகளையும் பிரச்சனைகளையும் உடனுக்குடன் ஓட்டப்பிடாரம் தேர்தல் பொறுப்பாளர் அண்ணன் நேருவிடமும் மாவட்டச் செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணனிடமும் தெரியப்படுத்தி பிரச்சனைகளைத் தீர்க்கிறோம்.
மேல் குறிப்பிட்ட கிராமங்களுக்கு ப.மு.பாண்டியன், க.அண்ணாதுரை,கடம்பூர் ராகவன்,பூக்கடை மணி ஆகியோர் உடன் வந்தார்கள்
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
29-04-2019
Image may contain: 6 people, people smiling, crowd and outdoor
Image may contain: 2 people, people smiling, people sitting
Image may contain: 4 people, people standing
Image may contain: one or more people, people standing and night
Image may contain: 1 person, sitting, standing and indoor

Monday, April 29, 2019

தண்ணீரை பூமிக்குள் தேடுவது பெரும் ஆபத்து.

தண்ணீரை பூமிக்குள் தேடுவது பெரும் ஆபத்து. அது வானத்திலிருந்து வரவழைக்க கடமையைச் செய். இதை நம்மாழ்வார் தன்னுடைய பாசுரங்களில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே அறிவியல் ரீதியாக கூறியுள்ளார்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
28-04-2019

கோவில்பட்டி குடிநீர் திட்டத்திற்கு இரண்டாவது பைப் லைன்....



கோவில்பட்டி குடிநீர் திட்டத்திற்கு இரண்டாவது பைப் லைன்....
-----------------------------------------------------------------------

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்காக நேற்று இளவேளங்கால் கிராமத்திற்கு சென்றோம்.
கோவில்பட்டி குடிநீர் திட்டத்திற்கு இரண்டாவது பைப் லைன் அமைத்து அங்கு குடிநீர் நீரேற்று நிலையம் கட்டப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் இவ்வளவு பெரிய கட்டுமானம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இவற்றால் எங்களுக்கு ஓர் சொட்டு தண்ணீர் கிடைக்க போவதில்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர்.கழக ஆட்சி வந்தவுடன் பிரச்சினையை தீர்க்க ப்படும் என்றோம்.
தலைவர் கலைஞரின் தலைமையிலான திமுக ஆட்சிக்காலத்தில், தலைவர் எம்.கே.எஸ். அவர்கள் உள்ளாட்சி அமைச்சராக இருந்தபோது இந்த கோவில்பட்டி இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதற்கான நிதி ஒதுக்கீடும் அப்போதே செய்யப்பட்டது. 2011ஆம் ஆண்டில் திமுக ஆட்சி நிறைவு பெற்ற நேரம் அதிமுக ஆட்சிக்கு வந்து இந்த திட்டத்தை கிடப்பில் போட்டது. இது தொடர்பாக ஒரு பொதுநல வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்தபின், தற்போது தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டது போல திமுகவின் திட்டத்தை செயல்படுகிறார்கள் என்பது செய்தியாகும்.
Image may contain: 2 people, outdoor
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
28-04-2019

Sunday, April 28, 2019

ஆஸ்திரேலியன் செனட்டரின் மாண்பும்..... தாய்மையும்.....

#Salute to #Australian Senator Larissa Waters with her daughter, Alia Joy
ஆஸ்திரேலியன் செனட்டரின் மாண்பும்.....
தாய்மையும்.....
தான் பெற்ற குழந்தைக்கு நாடாளுமன்ற அவையிலே பாசியை போக்கும் நாடாளுமன்ற உறுப்பினர், தாயின் பெருமை!

Did you know? Australian Senator Larissa Waters had become the first politician to breastfeed in the parliament way back in 2017.
“Women are going to continue to have babies and if they want to do their job and be at work and look after their baby, the reality is we are going to have to accommodate that. We need more family-friendly and flexible workplaces, and affordable child care, for everyone", she said. In Picture: Australian Senator Larissa Waters with her daughter, Alia Joy. #Respect
Image may contain: 1 person, smiling, sitting

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் #வாழை ஒரு முக்கிய பயிராகும்.



திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில்#வாழை ஒரு முக்கிய பயிராகும். சமீபத்தில் பெய்த மழையாலும், காற்றாலும் வாழை மரங்கள் முற்றிலும் சாய்ந்துவிட்டன. மே-ஜூன் மாதங்களில் வாழைக்கன்றுகளை ஊன்றி அடுத்த வருடம் மார்ச் மாதம் வாழைத்தார் ஆக வளர்ந்துவிடும். இரண்டு, மூன்று வாழைக்கன்றுகள் முளைத்துவிடும். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் கிட்டத்தட்ட 10 ஆயிரம் ஏக்கரில் வாழை பயிரிடப்படுகிறது. வாழை தார் ரூபாய் 25 க்கு அதிகப்படியாக கொள்முதல் செய்யப்படும், குறைந்த விலை ரூபாய் 11 க்கும் வீழ்ச்சியடைந்ததும் உண்டு, எட்டு ரூபாய் விலையிலும் விற்று வந்த விவசாயிகள் நஷ்டப்பட்டது உண்டு. இங்கிருந்து கேரளாவுக்கு அதிகமாக வாழைத்தார்கள் விற்பனைக்கு செல்கின்றன. 
இந்த நிலையில் தற்போது பெய்த மழையால் வாழை மரங்கள் சேதம் அடைந்து விளைச்சலுக்கு வராமல் காய்ந்தது விவசாயிகளுக்கு பெரும் இழப்பாகும். ஒரு ஏக்கருக்கு வாழை பயிரிட ஒரு லட்சம் வரை செலவாகும். இந்நிலையில் இன்சூரன்ஸ், பயிர் காப்பீடு விவசாயிகளுக்கு கைகொடுப்பதில்லை. என்ன செய்ய? வாழைப் பழ விற்பனை கடைகள் தான் இருக்கிறது. ஒழிய பெரிய சந்தை இந்த இரண்டு மாவட்டத்திலும் இல்லை என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாகும்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
28-04-2019
Image may contain: plant, tree, outdoor and nature

ஜனநாயகத்தில் தகுதி உள்ள ஒருவருக்கு அளிக்கப்படும் ஓட்டு மட்டுமே மக்களுக்கு அதிகாரமானது.


ஜனநாயகத்தில் தகுதி உள்ள ஒருவருக்கு அளிக்கப்படும் ஓட்டு மட்டுமே மக்களுக்கு அதிகாரமானது . தகுதியற்ற ஒருவருக்கு அளிக்கபப்டும் ஓட்டு மக்கள் தங்களுக்கு எதிராக போட்டுக் கொள்ளும் ஓட்டுதான்.
******
தவறான நம்பிக்கை, வலுவான ஒருவரை இன்னொரு வலுவானவரே வெல்ல முடியும் என்பது. அப்படியென்றால் ஒரு ரவுடி நமக்கு சட்டமன்ற உறுப்பினராக வந்தால் இன்னொரு மேலும் வலிமையான ரவுடிதான் அவரை ஜெயிக்கமுடியும். அவரை இன்னொரு ரவுடிதான் ஜெயிப்பார். ஆக, நமக்கு ரவுடிகள் மட்டுமே கடைசிவரை சட்டமன்ற உறுப்பினர்கள், இல்லையா?

#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
27-04-2019 

ஈழ இறுதிப்போர் முடிந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. *தமிழீழ சட்டக் கோவை*

ஈழ இறுதிப்போர் முடிந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. தமிழீழ சட்டக் கோவை
————————————————-
இலங்கையில் நடந்த துயரங்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை. விடுதலைப் புலிகள் இயக்கம் அங்கு இருந்திருந்தால் இந்த ரணங்கள் எல்லாம் நடந்திருக்காது. ஈழத்தில் 2009இல் இறுதிப்போர் நடந்த முடிந்து 10ஆண்டுகள் முடிந்து விட்டது. ஈழத்தில் இதற்க்கு முன் விடுதலைப் புலிகளுடைய நிர்வாகமும், சட்டதிட்டமும் எப்படி உள்ளன என்பது தான் இந்த நூலின் சாட்சியங்கள். நிர்வாகமும், மக்களுக்கான பணிகளும் அப்போது எப்படியிருந்தன என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

பருத்தி விவசாயம்

—————————
கடந்த 25-04-2019 விளாத்திகுளம் சென்றபோது பேருந்து நிலையம் ஆட்டோவில் பருத்தியை நிரப்பிக் கொண்டுவந்து பருத்தி வியாபாரிகள் இறக்கினார்கள்.

ஒரு காலத்தில் பருத்தி காட்டில் பருத்தியை எடுக்கும் வேலையாட்களுக்கு சம்பளப் பணம் தராமல் அதற்குப் பதிலாக பருத்தியை கூறு போட்டு ஓரு பகுதியை அவர்களுக்கு கொடுப்பார்கள். வானம் பார்த்த கந்தக பூமியில் பருத்தியும், மிளகாயும் அதிகம் விளையும். அதை அறையில் பக்குவப்படுத்தி பாதுகாத்து வைத்து நல்ல விலை வரும்போது சங்கரன்கோவில், கோவில்பட்டி, விருதுநகர் கமிசன் வியாபாரிகளுக்கு விவசாயிகள் விற்பதுண்டு. வட்டவடிவில் தாட்டுகள் என ஒருங்கிணைந்த சாக்குகளாக கட்டி பருத்திகளை மாட்டு வண்டியிலோ, லாரியிலோ பாரம் ஏற்றி அனுப்புவதுண்டு.

நேற்று விளாத்திகுளத்தில் பார்த்தபோது அந்த பருத்தியை ஷேர் ஆட்டோவில் வந்து தள்ளியபோது இந்த வட்டாரத்தில் விளைச்சலும் இல்லை, வெள்ளாமை இல்லை என்ற கவலையான காட்சி தெரிந்தது. சங்கரன்கோவில், கோவில்பட்டி, சாத்தூர், ஒட்டப்பிடாரத்தில் உற்பத்தியாகிற பருத்தியை பிரிட்டிஷார் ஆட்சிக்காலத்தில் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து பிரிட்டன் லங்காசசையர், மான்செஸ்டர் போன்ற இடங்களுக்கு எல்லாம் கொண்டு சென்றதுண்டு. இந்த பருத்தி ஏற்றுமதிக்காகவே தூத்துக்குடியில் கிரேட் காட்டன் சாலை என்று அப்போது அமைத்தார்கள்.
இதே போல சென்னை சைதாப்பேட்டையிலும் பருத்தி விதைகள் போட்டு நடவு செய்து முயற்சி செய்த போது அது பொய்த்துவிட்டது. பஞ்சாபில் ஹிப்பாலிலும், டெல்லியிலுள்ள பூசாவிலும் முயற்சி செய்தபோது சரியாக வரவில்லை. எங்கேயும் அவர்களுக்கு சிறப்பான விளைச்சல் கிடைக்கவில்லை. அதனால் கோவில்பட்டியை ஆங்கிலேயரின் காட்டன்பட்டி என்றும் அழைத்துதுண்டு. இதற்காக கோவில்பட்டி விவசாயப் பண்னையை பருத்தி, மிளகாய், மானாவாரி தானியப் பயிர்களுக்கான ஆராய்ச்சி நிலையம் நிறுவி 119 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த கரிசல் மண் பகுதியில் 1960லிருந்து நினைவு. இந்த பருத்தி நாட்டுப் பருத்தி என்றும், லட்சுமி காட்டன் என்றும், இன்றைக்கு பி.டி.காட்டன் வரை பல வகையான பருத்தி பயிர்கள் வந்துவிட்டன. 
அப்படி விளைந்த பருத்தியும், மிளகாயும், எண்ணெய் வித்துக்களும் அந்த காலத்தில் லாரியில் வழிந்து சென்றது. இன்றைக்கு ஆட்டோவில் எடுத்து வரும் சூழலை பார்க்கும்போது, படிப்படியாக விவசாயம் அழிந்து வருகிறதோ என்ற ரணங்கள் தான் நெஞ்சில் எழுகின்றன.
Image may contain: 3 people, outdoor

விவசாயிகள் மத்தியல் 100 குவிண்டால், 200 குவிண்டால் என்று பேசிக் கொண்டு வந்த பருத்தி தற்போது 100 கிலோ, 200 கிலோ என்ற அளவிலேயே பேசுவது சற்று வருத்தத்தை தருகிறது.
Image may contain: outdoor and nature
1994 ஆம் ஆண்டில் பருத்தி உற்பத்தியில் ஏற்பட்ட அமோக விளைச்சல் காரணமாக போதுமான ஆதார விலை கிடைக்கவில்லை. அது தொடர்பாக கோவில்பட்டி புது ரோட்டில் அரசு மருத்துவமனை எதிரில் எனது தலைமையில் விவசாயகளின் போராட்டம் நடைபெற்றது. அப்போது பருத்தியை சாலை முழுவதும் கொட்டி எதிர்ப்பைத் தெரிவித்தோம்.
Image may contain: sky, outdoor and nature
என்ன செய்வது? உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்று கிராமங்களும் மாறுகின்றன, விவசாயமும் மாறுகின்றன. எந்த திசையை நோக்கி செல்கின்றது என தெரியவில்லை.
பூர்விகமான, மரபு ரீதியான விவசாயம் அழிந்து கொண்டு வருகிறது என்பதை கணக்கில் எடுத்துக் கொண்டு செயல்படவில்லை என்றால் பெரும் இழப்பீடுகளுக்கு ஆளாவோம் என்பதை நாம் அனைவரும் உணரவேண்டும்.
#பருத்திவிவசாயம்
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
26-04-2019

Saturday, April 27, 2019

ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தலில் வேட்பாளர் சண்முகய்யாவுக்கு ஆதரவு திரட்டுகிறேன்.

ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தலில் வேட்பாளர் சண்முகய்யாவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் தொகுதியில் முன்னாள் அமைச்சர் அண்ணன் கே.என்.நேரு மற்றும் மாவட்டச் செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களும் முழு மூச்சாக பணியில் உள்ளனர்.

இன்று (27-4-2019) மலைப்பட்டி, பரிவிளிக்கோட்டை, கொல்லங்கிணறு, ஒட்டநத்தம், கொத்தாளி போன்ற கிராமங்களில் மக்களை சந்தித்து தேர்தல் அடிப்படை களப்பணிகளை கவனித்தும் வாக்காளர்களின் ஆதரவையும் திரட்டினோம். பரிவிளிக்கோட்டை ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தின் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி இருந்தது. அந்த பயிற்சிக் கூடம் மூடப்பட்டு கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. குருவிகுளம், வானரமுட்டி, சண்முகரங்காபுரம் என ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில் இருந்த ஆசிரியர் பயிற்சி பள்ளி அதே காலத்தில் மூடப்பட்டன.

கொல்லங்கிணறில் நீண்ட காலத்திற்கு பிறகு சகோதரர் பிரச்சார கணேசனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கோவில்பட்டி அரசியல் களத்தில் ஒரு காலத்தில் முக்கியப் புள்ளியாக 2000 வரை திகழ்ந்தவர். கிராமத்தில் அமைதியாக விவசாயம் பார்த்து கொண்டுள்ளார். அவரைப்பார்த்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி.
உடன் முன்னாள் அமைச்சர் தங்கவேலு, ப.மு.பாண்டியன், க.அண்ணாதுரை, கடம்பூர் ராகவன், டி.ஆர்,குமார், பிரச்சார கணேசன்,மணி மற்றும் கழகத் தோழர்கள் வந்தனர்.

#ஒட்டப்பிடாரம்_இடைத்தேர்தல்
#KSRPostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
27-04-2019.
Image may contain: 8 people, people standing and outdoor
Image may contain: 5 people, people standing
Image may contain: 6 people, people standing and outdoor
Image may contain: 4 people, people standing
Image may contain: 2 people, people standing, night and outdoor
Image may contain: 2 people, people standing
Image may contain: 2 people, people standing

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...