Saturday, July 17, 2021

#அரசியல்_சதுரங்கத்தில், தகுதியே தடை என்ற நிலையில் உழைப்பவனுக்கு உதை, உறங்குபவனுக்கு மகுடம்

#அரசியல்_சதுரங்கத்தில் கடந்த காலத்தில் ஏன் அப்படி நடந்தது? ஏன் இப்படிப்பட்ட தியாகசீலர் புறக்கணிக்கப்பட்டார் என்ற கேள்விகளுக்கு விடை இன்றைக்கு வரை புதிர்களாக உள்ளன. நல்ல மனிதர்களும் நல்ல நேர்மையான தியாகிகளும் அரசியல் வரலாற்றில் இடம்பெறாமல் போய்விட்டனர்.  ஆனால் குற்றச்சாட்டுக்கு  உட்பட்ட நெறி அற்ற சிலரெல்லாம்,வரலாற்றில்கொண்டாப்
படுகின்றனர். தகுதியே தடை என்ற நிலையில் உழைப்பவனுக்கு உதை, உறங்குபவனுக்கு மகுடம் அளிப்பதுதான்
இன்றைய நிலை….

இப்படியான வினாக்களுக்கு பதில் தெரியவில்லை இவையெல்லாம் அவிழ்க்கப்படாத முடிசு்சுகளாக டெல்லி அரசியலிலும், பல்வேறு மாநில அரசியலிலும் புரியாத புதிராக இருப்பதற்கு இன்று வரை விடை பிடிபடவில்லை.




‘’இன்றைய அரசியலுக்கும் நேர்மைக்கும் தொடர்பே கிடையாது, தார்மீக வழிமுறைகளின் அடிப்படையில் ஆட்சி நடத்தும் ஓர் ஆட்சியாளனை திறமையான அரசியல்வாதி என்று கூறமுடியாது.

அவனால் இன்றைக்கு ஆட்சியில் நிலைத்திருக்க வாய்ப்பில்லை, ஆட்சி புரிய விரும்பும் ஒருவன் தந்திரங்களை கையாளவும் மக்களிடம் பாசாங்கு செய்து அவர்களை எந்த முறையில் நம்பவைக்க வேண்டுமோ அந்த முறையில் நம்பவைக்கவும் தெரிந்திருக்கவேண்டும்,

இரு பெரும் உன்னதக் குணங்களாக கருதப்படும் நேர்மையும் வெளிப்பட தன்மையும அரசியலை பொருத்தவரை இன்று தீண்டத்தகாதவை.’’

-செர்கி நிலஸ்

(படம்- சபர்மதி ஆசிரமம்)
#ksrpost
17-7-2021.

No comments:

Post a Comment