சட்டசபைத் தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது குறித்து ஆராய கள ஆய்வுக் குழுவை ஸ்டாலின் நியமித்துள்ளார்!
இது தொடர்பாகக் கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் 23 பேருடன் திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் வைத்து ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்! அப்பொழுது கள ஆய்வு என்கிற பெயரில் யாரோ எழுதிக் கொடுத்ததை திமுகத் தலைவர் ஸ்டாலின் பேசிச் சென்றதால் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அப்செட் ஆகி உள்ளார்களாம்! இது குறித்து திமுக செய்தித் தொடர்பாளர்கள் சிலர் கூறும் போது “கட்சிக் கொள்கைகளைப் பரப்பும் நிர்வாகிகளுடன் ஸ்டாலினும் உதயநிதியும் ஆலோசனை செய்ய உள்ளதாக எங்களை அழைத்தனர்! கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் இருந்தபோது ஒரு முறை கூட எங்களை அழைத்துப் பேசியதில்லை! தோல்விக்குப் பிறகாவது அழைக்கின்றார்களே என ஆர்வத்தோடு சென்றோம்.! ஆனால் தன் மனதில் இருந்து ஒரு வார்த்தையைக் கூட ஸ்டாலின் பேசவில்லை! அவரது உதவியாளர் தினேஷ் எழுதிக் கொடுத்ததை அப்படியே வாசித்தார். அப்பொழுதே வெறும் கண்துடைப்புக் கூட்டம் என்பது தெளிவானது! பின்னர் எங்களைப் பேசுமாறு கூறினர்! அதையும் கூட ஸ்டாலினும் உதயநிதியும் காது கொடுத்துக் கேட்கவில்லை!. திமுக அடி நாதமே கள அரசியல் தான்! அதை உதயநிதி செய்ய வேண்டும்! என ஒருவர் பேசினார்.! அப்பொழுது விஜய் கள அரசியல் செய்துதான் முதல்வர் ஆனாரா!? பிரச்சனை சார்ந்து அரசியல் செய்தால் போதும் என உதயநிதி கூறிவிட்டார்.! இப்படிச் செயல் திட்டங்கள் குறித்துப் பேசும்போதெல்லாம் தடை போட்டுக் கொண்டே இருந்தார்களாம்! இறுதியாக அச்சு ஊடகம் காட்சி ஊடகத்தை எப்படி கையாள வேண்டும் என பாடம் எடுக்கப்பட்டதாம்! இதைத்தான் ஆட்சியில் இருந்தபோது “பென்” நிறுவனம் செய்தது!மீடியாக்களைக் கவர்வதை விட மக்களைக் கவர வேண்டும் என்ற எதார்த்தம் தலைமைக்கு இன்னும் புரியவில்லை!?எந்தத் தொலைக்காட்சியில் யார் பேச வேண்டும் என்பதைத் தீர்மானிக்க பலவேசம் என்பவரை நியமித்துள்ளனராம்! ஆட்சியில் இருந்தபோதும் இவர் தான் அந்தப் பணியை மேற்கொண்டாராம்! மீண்டும் அவரிடமே இப்படியான பணியைக் கொடுத்துள்ளனர்!இவ்வளவு பெரிய தோல்விக்குப் பின்னும் தலைமை பாடம் கற்கவில்லை என்ற அதிருப்தியுடன் திமுகவினர் பேசிக் கலைந்து சென்றுள்ளார்கள். இப்படி ஒரு செய்தி இன்றைய நாளேட்டில்…. •••• இதுவரை எனக்குத் தெரிந்து கலைஞரின் காலத்தில் திமுகவின் தோல்விகளைக் குறித்து ஆராய்வதற்கான மூன்று குழுக்களை ஏற்கனவே நியமித்திருந்தார்கள்.இது நான்காவது குழு! 2014 நாடாளுமன்ற தேர்தலில் தோல்விக்கு பிறகு; நான் கடந்த மூன்றாவது குழுவில் இடம் பெற்று இருந்தேன். கிட்டத்தட்ட 40 பக்கங்களுக்கும் மேலான அறிக்கையை அந்த குழுவில் நானே என் கைப்படத் தயார் செய்தேன்! கலசப்பாக்கம் திருவேங்கடம் கல்யாணசுந்தரம் போன்ற அண்ணா காலத்து மூத்தத் தலைவர்கள் எல்லாம் அக்குழுவில் இடம் பெற்றிருந்தார்கள்! அந்த அறிக்கையில் நாங்கள் நிர்லாக ரீதியாக பரிந்துரைந்த 65 மாவட்டங்களாக திமுகவை பிரித்துப் அவசியம் குறித்தும் பரிந்துரை செய்திருந்தோம்.. ஏனெனில் ஏற்கனவே திமுக நியமித்திருந்த மாவட்ட செயலாளர்கள் அனைவரும் குறுநில மன்னர்கள் (Feudal Lords)/குட்டி ஜமீன்களை போல தலைமைக்குக் கட்டுப்படாமல் தங்கள் பகுதியில் தாங்களே தலைவர்கள் போல கட்சிக்கு அப்பாற்பட்டு நடந்து கொண்டிருந்தார்கள். குறிப்பாக கே கே எஸ் எஸ் ஆர் போன்றவர்கள் அதிமுகவிலிருந்து வந்திருந்தாலும் திமுகவிற்கு வந்த பிறகு குறுநில மன்னர்களாகவே ஆகி விட்டார்கள்! தலைவர் கலைஞர் படத்தை சிறிதாகவும் மாவட்டச் செயலாளர், வாரிசுகள் போன்றவர்கள் மிகப் பெரிதாக பேனர்களில் பல்லைக் காட்டிக்கொண்டு நடந்து வருவது போல காட்சியளித்தார்கள். ஏதோ அவர்களைக் கேட்காமல் கலைஞரோ ஸ்டாலினோ கூட மாவட்டத்தின் உள்ளே நுழைய முடியாதபடிக்கு அவர்கள் கோட்டையைக் கட்டியிருந்தார்கள்! இதையெல்லாம் தடுக்க வேண்டும் இந்தப் போக்கினை வளர விடக்கூடாது! என்றெல்லாம் பலவிதமாக அந்த அறிக்கையில் நாங்கள் சொல்லி இருந்தாலும் அது என்னவோ நிறைவேறவில்லை! போகட்டும்! இந்த நாலாவது குழு என்ன விதமாக இத்தோல்வியை ஆய்வு செய்து என்ன பரிந்துரைகள் செய்திருக்கிறார்கள் எனத் தொண்டர்கள் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்! நான் எப்போதும் சொல்வது போல திமுகவில் நல்லவர்களுக்கு தான் இடமில்லையே! மருமகன் சூழ்ந்த விட்ட திமுக பல்வேறு மாவட்ட செயலாளர்களின் சுயநலத்திற்குப் பலியாகி போனதுதான் மிச்சம்! #திமுக #dmk #ksrpost #கேஎஸ்ஆர்போஸட்
Subscribe to:
Post Comments (Atom)
Yoga day column by VP
Yoga day column by VP @CPR_VP in Tamil Dinamani, today 20- 6-2026 @narendramodi @PMOIndia @AmitShah @nsitharaman @NitinNabin @...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment