Saturday, October 10, 2015

உ.வே.சா.வின் என் சரித்திரமும் - சாமுவேல் ஜான்சனின் வாழ்க்கையும்.





உ.வே.சா.வின் என் சரித்திரமும், சாமுவேல் ஜான்ஸனின் வாழ்க்கையும் என்ற இரண்டு நூல்களும் விறுவிறுப்பாக சலிப்பில்லாமல் படிக்கலாம்.

எப்படி தமிழ்த்தாத்தா உ.வே.சா தம்ழ் சுவடிகளைத் தேடிப்பிடித்து அச்சுக்குக் கொண்டுவர அவர்பட்ட பாடுகள், இதற்காக தமிழகம் முழுவதும் அவர் மேற்கொண்ட பயணங்கள், சந்தித்த மனிதர்கள், அதுதொடர்பான நிகழ்வுகள் என்று அவருடைய நூல் சுவாரசியமாக இருக்கும்.

அக்காலத் தமிழர்களுடைய பழக்கவழக்கங்கள், வரலாற்றுத் தரவுகளை எல்லாம் அவருடைய “என் சரித்திரம்” நூலில் அறிந்துகொள்ளலாம். ஆனந்த விகடனில் “என் சரித்திரம்” தொடர் வரும்பொழுது பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் தொகுப்பே பலப்பதிப்புகளாக வெளிவந்துள்ளது.

அம்மாதிரி ஆங்கிலேய எழுத்து ஆளுமை சாமுவேல் ஜான்ஸனின் வாழ்க்கையினைப் படிக்கும் பொழுது உ.வே.சாவின் என் சரித்திரத்தினைப் படிப்பது போல இருக்கின்றது. இதுவரை 344பக்கங்கள் படித்துள்ளேன். மொத்தத்தில் 1100பக்கங்கள் வரை கொண்ட ஆங்கில நூல் அது. சலிப்புதட்டாமல் வாசிக்க ஏதுவாக இருக்கின்றது இந்நூல்.

இலண்டன், கேம்ப்ரிட்ஜ், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்கள் பற்றியும், ஆங்கிலேய மக்களுடைய அன்றைய கலாச்சாரம், வாழ்க்கைமுறை பற்றிய எண்ணற்ற குறிப்புகள் சொல்லி மாளாது.

1709ம் ஆண்டு பிறந்த சாமுவேல் ஜான்சன் ஆங்கிலேய இலக்கிய கர்த்தாவும், நல்ல விமர்சகரும் ஆவார். ஆங்கில அகராதியை முதன்முதலில் உருவாக்கியவர் இவரே. இவரது அகராதி 1755 ஆம் ஆண்டில் வெளியானது. 1784ம் ஆண்டு இவர் மறைந்தார்.

சாமுவேல் ஜான்சனின் அகராதி குறித்து...
TALK of war with a Briton, he'll boldly advance,
That one English solider will beat ten of France;
Would we alter the boast from the sword to the pen,
Our odds are still greater, still greater our men:
In the deep mines of science tho' Frenchmen may toil,
Can their strength be compar'd to Locke, Newton, and Boyle?
Let them rally their heroes, send forth all their pow'rs,
Their verse-men, and prose-men; then match them with ours!
First Shakespeare and Milton, like gods in the fight,
Have put their whole drama and epic to flight;
In satires, epistles, and odes would they cope,
Their numbers retreat before Dryden and Pope;
And Johnson, well arm'd, like a hero of yore,
Has beat forty1 French, and will beat forty more.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
10-10-2015
#UVeSa and #SamuelJohnson. #TheLifeofSamuelJohnson

No comments:

Post a Comment

2023-2024