Saturday, October 24, 2015

மாக்ஸ்வெல் பரணகம குழுவின் அறிக்கை குறித்து என்னுடைய கருத்து

இந்த வார (அக்24-27’ 2015) நக்கீரன் இதழில், இலங்கை முள்ளிவாய்க்கால் போரினைக்குறித்து மாக்ஸ்வெல் பரணகம குழுவின் அறிக்கை குறித்து என்னுடைய கருத்து வெளியாகியுள்ளது அதுவருமாறு... 




 இலங்கை சிங்கள நீதிபதி யின் இந்த அறிக்கை மீதான அடுத்தகட்ட நகர்வுகள் எப்படிப் பட்டதாக இருக்கும்? என ஈழப் பிரச்சனையின் நீள-அகலங்களை முழுமையாக ஆராய்ந்து வருபவரும் தி.மு.க.வின் செய்தித்தொடர்புச் செயலாளருமான வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனிடம் கேட்ட போது, ""போர்க்குற்றங்களை இன அழிப்பின் அடையாளமாகத் தான் பார்க்க வேண்டும். இதனை திட்டமிட்டே தவிர்க்கிறார்கள். ராஜ பக்சே எதிரி என்றாலும் சொந்த இனத்துக்காரன் என்பதால் சிறிசேனா வும் ரணிலும் சேர்ந்து ராஜபக்சேவை பாதுகாக்க நினைக்கிறார்கள். அதனால்தான் இன அழிப்பு என்கிற வார்த்தை இடம் பெறாமல் பார்த்துக்கொள்ளப்படுகிறது. புலிகளை குற்றவாளிகளாக சித்தரிக்கும் முயற்சி மேக்ஸ்வெல்லின் அறிக்கையிலும் இருக்கிறது. இதனை ஏற்க முடியாது. ஐ.நா. கூறியதுபோல இறுதிக் கட்டத்தில் 40 ஆயிரம் பேர் கொல்லப்படவில்லை, என்று மேக்ஸ் வெல் சொல்வதை ஏற்க முடியாது.




ஈழத்தில் நடந்த இனஅழிப்புக்கு பன்னாட்டு விசாரணை மட்டுமே தீர்வாக அமையும். லைபீரிய அதிபர் சார்லஸ் டெய்லரின் இன அழிப்பு குற்றங்கள் வெளிநாட்டில் நடத்தப் பட்டுத்தான் அவர் தண்டிக்கப்பட்டார்.


அதேபோன்ற விசாரணை ராஜ பக்சே விவகாரத்திலும் நடத்தப்பட வேண்டும். அடுத்தக்கட்ட நகர்வுகளை இந்திய அரசு முன்னெடுப்பது அவசியம். ஆனால், இந்தியா அக்கறை காட்டுவது போலத் தெரியவில்லை'' என்கிறார் ஆவேசமாக.

#KsRadhakrishnan #KSR_Posts #SrilankaTamils

#MaxwellParanagamaCommissionReport

No comments:

Post a Comment

*Life is a circle of happiness, sadness, hard times, and good*

*Life is a circle of happiness, sadness, hard times, and good*. If you are going through a hard time, you've got to stay strong to be st...