Sunday, October 18, 2015

தமிழினி - நீங்காத மரணவலி!



காலநதிக்கரையில்
எஞ்சிக்கிடக்கிறது
இத்துப்போனவொரு வாழ்க்கை
இடைவிடாதுகொட்டிக் கொண்டிருக்கும்
விசத்தேள்களாக நினைவுகள்
குடைவதால் நெஞ்சினில்
நீங்காத மரணவலி
“சாகத்தானே போனதுகள்
சாகாமல் ஏன் வந்ததுகள்”
குறுக்குக் கேள்விகளால்
கூண்டுக்குள்ளேயே
பிணமாகி கனக்கிறது
போராடப் போன மனம்.

-தமிழினி
(02/05/2015)

No comments:

Post a Comment

30 August

  எந்த இடியட்க்கும் பதில் சொல்ல மாட்டேன் | ஸ்டாலின் உருட்டு.. அவிழ்த்து விட்ட #KSR KSR | BJP | AMITSHAH | MODI | L MURUGAN | NAINAR NAGEND...