Sunday, October 4, 2015

சுடுமணல் பயணம் - Oasis Travel.

வாழ்க்கை பெரும்பாலும் பாலைவனப் பயணம் ஆகிவிட்டது. இருப்பினும் போர்க்குணம் போகவில்லை. மனத்தளவில் இந்தியாவைக் கடந்து கண்டங்களில் உள்ள பாலை நிலங்களைப் பார்க்கவேண்டிய ஆசை வெகுநாளாக இருந்தது.

அந்தப்பாலைவனப் பயணம் தான் இது. போராளி பாலைவனத்திலும் வெற்றிக்கொடி நாட்டுவான். இயலாதவன் தான் செழிப்பான நிலத்தை நாடுவான் என்பதுதான் பாலை நிலம் உணர்த்தும் செய்தி.

பாலைநிலத்திலும் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். நாட்டுப்புறக் கலைகளும், நடனங்களும், இரவு கேளிக்கைகளும் கடின உழைப்பில் ஈடுபடும் மக்களுக்கு அங்கும் ஏகாந்தங்களும், மகிழ்ச்சியும் உள்ளது.

பாலைவனப் பயணம் என்பது ரம்மியமில்லாமல் இயல்பாகவே வேகமாகவும், போட்டிபோட்டுக் கொண்டு செல்கின்ற பயணமாகும். வாழ்க்கையும் பாலைவனப் பயணமும் பொறுத்தமாகத்தான் இருக்கின்றது. இது என்னை மிகவும் கவர்ந்தது.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
04-10-2015.






No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...