கோவில்பட்டியில் இருந்து இன்று (26.04.2019) காலை கோவில்பட்டிலிருந்து தூத்துக்குடிக்கு பயணித்தபோது சந்திரகிரி கிராமம் நினைவில் வந்தது. கி.ரா வின் கரிசல்காட்டுக் கடுதாசி 1987 ல் ஜூனியர் விகடனில் தொடராக வந்தபொழுது கரிசல் காட்டு சம்சாரிகளின் பாடுகளும், கடன் தொல்லைகளும், ஜப்திகளும், விவசாயப் போராட்டங்களும், சிந்தனைகளும் நினைவுகளாக வந்து சென்றன. 1987லரஜுனியர் விகடனில் 50 வாரங்கள் தொடராக வெளிவந்து வாசகர்களின் வரவேறப்பெற்றது.
நேசனல் புக் டிரஸ்ட் 13 இந்திய மொழிகளில் வெளியிட்டுள்ளது.
கி.ரா கட்டுரைத் தொகுதியில் இடம் பெற்றிருந்த அண்ணாச்சி பற்றி உள்ளது. அண்ணாச்சி என்ற சொல் மேலும் பிரபல மானது. சென்னையில்யுள்ள நெல்லை வட்டார பலசரக்கு-மளிகை வியாபாரகளை அண்ணாச்சி அதன் பின்
அதிகமாகஅழைக்கப்பட்டனர்.
இரண்டாவது முறையாகவும் இக்கட்டுரையை படித்தபோது முன்பை விட அதிக மகிழ்ச்சியும், அதைவிட அதிக துக்கமும் ஏற்பட்டது.
காந்தியின் பரம சீடரான, மருந்துக்கும் பொய் சொல்லாத அண்ணாச்சி, புத்தக விசயத்தில் மாத்திரம் பொய் சொல்வார். அந்தளவுக்கு புத்தகங்களை நேசித்துள்ளார். தனி நபர் சத்யாக்கிரகத்தில் பங்கெடுத்துக் கொண்டு சென்னை வரை நடை பயணம் சென்றார். இதில் கலந்து கொள்வதற்கு காந்திஜியிடமிருந்து அண்ணாச்சியின் பெயருக்கு கடிதம் வந்தது. திருமணத்திற்கு அண்ணாச்சி இனாமாக எழுதித் தரும் கவிதைகளை வாங்கிச் செல்வோர் தம் பெயர்களை போட்டு அச்சடித்து அதை சட்டம் போட்டு வழங்குவர். இப்படி சந்தோசமான நிகழ்வுகளால் எல்லா நாளும் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த வாழ்க்கை திருமணத்திற்கு பிறகு துன்பமாக மாறியது. அடுத்தடுத்து இரண்டு பெண் பிள்ளைகள் பிறந்தால் பொருளாதப் பிரச்சனை. வீட்டில் சண்டை. போதாக்குறைக்கு டி.பி நோய் வந்து தாக்கியது. டி.பி நோயிலிருந்து ஐயா கி.ரா போன்ற நண்பர்களின் உதவியால் உயிர் பிழைத்தாலும், எமன் அண்ணாச்சியின் உயிரை மின் கம்பி மூலம் எடுத்துக்கொண்டான். கோடை மழையில் அறுந்து கிடந்த கம்பியை மிதித்து உயிருக்கு போராடிய ஒருவரை காப்பாற்றச் சென்ற அண்ணாச்சியும் மின்சாரம் தாக்கி இறந்தார். அண்ணாச்சியின் குடும்பத்துக்கு நிதி வசூல் செய்து தந்து அவரது குடும்பத்தை காப்போம் என்று அண்ணாச்சியின் பிணம் முன் சபதம் எடுத்தவர்கள் நிதி வசூலித்து அவரவர் குடும்பத்தையே காத்துக் கொண்டனர். அண்ணாச்சி இறந்தும் பிறரை வாழ வைத்தார். அண்ணாச்சியின் குழந்தைகள் இரண்டும் இறந்து போயின. அண்ணாச்சியின் மனைவி படும் துயரையும் ஆசிரியர் ஜீ.வி. படிக்கும் வாசகர்களுக்கு கடத்தியதால் பலர் நிதி உதவி செய்தனர். அத்துடன் விகடன் குழுமமும் ஒரு தொகையை சேர்த்து இரண்டாயிரமாக அண்ணாச்சியின் மனைவிக்கு வழங்கியது.
இதேபோல் உணர்ச்சிமிக்க மற்றொரு கட்டுரை பி.எஸ் பற்றிய கட்டுரை .
அந்தக் காலத்தில் காப்பியை மக்களிடம் கொண்டுச் சேர்க்க இனாமாக கொடுத்தது, பேருந்து நிலையத்திற்கு போய் சொல்லி வைத்தால் இருக்கும் இடத்திற்கே பேருந்து வந்து அழைத்துச் சென்றதை படிக்கும் போது சுவாரஸ்யமான புதியத் தகவலாக இருக்கிறது.
கட்டுரைகளுக்கு ஏற்றவாறு குறிப்பிட்டுள்ள சொல்வடைகள் மேலும் சிறப்பு சேர்க்கின்றன.
இப்படி ஒவ்வொரு கட்டுரைகளும் எளிய சொற்பதங்களால் வாசகர்களின் மனதில் வியாபித்து என்றும் நிலைபெறுவதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களிடம் அசை போட்டுக்கொண்டே இருக்கச் செய்பவை.
#விளாத்திகுளம்
#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
26-04-2019
No comments:
Post a Comment