Tuesday, October 13, 2015

பாளை , புனித சவேரியர் கல்லூரி - லூர்து நாதன்



நண்பர் R Narumpu Nathan தன்னுடைய பதிவில் பாளையங்கோட்டை தெற்கு பஜார் மேற்கு முனையில் உள்ள நகராட்சி அலுவல வளாகத்தில் நிறுவப்பட்ட லூர்து நாதன் சிலையை பற்றி எழுதியுள்ளார்.
இது குறித்து விவரமாக அவரே எழுதியுள்ளார், இருப்பினும் லூர்து நாதன் சேலத்தை சேர்ந்தவர் , புனித சவேரியர் கல்லூரியில் பி.காம் படித்தார்.அந்த நேரத்தில் மாணவர் அரசியலில் இருந்ததால், இந்த சிலையமைப்பு குறித்து ஓரளவிற்கு நினைவுக்கு வருகிறது. பெருந்தலைவர் காமராஜர், மறைந்த செல்லப்பாண்டியன் , வழங்கறிஞர் பெப்பின் பெர்னாண்டோ மற்றும் நெல்லை நகரத்தின் முக்கிய பிரமுகர்கள் கலந்துக்கொண்ட சிலைதிறப்பு விழா நிகழ்ச்சி இன்னும் நினைவில் உள்ளது. நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. நரம்பூதி நாதன் பதிவு கவனத்தை ஈர்த்தது. அந்த பதிவு வருமாறு ..


தூய சவேரியார் கல்லூரியில் வேதியியல் துறை சீனிவாசன் என்ற பேராசிரியர் பாளை. தெற்கு பஜாரில் இருந்தார்.ஒரு முறை வாசலில் அவர் நின்று பேசிக்கொண்டு இருக்கும்போது அந்த வழியே வந்த மேடை போலீஸ் ஸ்டேஷன் காவல் ஆய்வாளர் மகன் யாரோ ஒரு பெண்ணை கேலி செய்வதை பார்த்து சத்தம் போட்டாராம்.அவன் நேரே அவனது அப்பாவிடம் சென்று பேராசிரியர் திட்டிய சம்பவத்தை சொல்லி இருக்கிறார்.அந்த இன்ஸ்பெக்டர் நேரே வந்து பேராசிரியரை காவல் நிலயத்துக்கு அழைத்து சென்று கடுமையாக தாக்கி இருக்கிறார்.அருகில் இருந்த இன்னொரு பேராசிரியர் ஒருவர் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவரையும் தாக்கி இருவரையும் ரிமாண்ட் செய்திருக்கிறார்கள்.
மறுநாள் காலையில் விசயம் வெளியே தெரிந்து சேவியர் கல்லூரி மாணவர்கள் ஸ்ட்ரைக் செய்து இருக்கிறார்கள்.மேலும் மாவட்ட ஆட்சியரிடம் ஊர்வலமாக முறையிட சென்றார்கள்.

சுலோச்சனா முதலியார் பாலம் வரும் போது காவல் துறை தடுத்து நிறுத்தினார்கள்.மாணவர்கள் மீது கடுமையாய் லத்தி சார்ஜ் செய்ய துவங்கினார்கள்.(ஜுலை 21 மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் தாக்கப்பட்ட சம்பவம் ஞாபகம் வருகிறதா..?)பாலத்தின் வலது புறத்தில் இருந்து ஆற்றில் குதித்த மாணவன் லூர்துநாதன் ஆழமான தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இறந்து போனான்.இறந்த அவர்  உடலை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கல்லூரி நோக்கி மாணவர்கள் வர, காவல் துறை கல்லூரி வாசலில் இறந்த லூர்து நாதன் அவர்களின்  உடலை கைப்பற்றி கொண்டு சென்று விட்டது.

தமிழகம் எங்கும் கல்லூரி ஆசிரியர்களும் மாணவர்களும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.அன்றைய கழக அரசு  ஒரு விசாரணை கமிஷனை நியமித்தது 
.போலீஸ் இன்ஸ்பெக்டர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.பின் அவர் மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவம் நடைபெற்றது 21.11.1972.
தனது பேராசிரியர் தாக்கப்பட்டதற்காக தனது உயிரை இழந்த மாணவன் லூர்து நாதர்  நினைவாக பாலை.தெற்கு பஜாரில் பெருந்தலைவர் காமராஜ் அவர்களால் லூர்து நாதன் சிலை திறக்கப்பட்டது.
நாற்பது வருடங்கள் ஓடி விட்டன..மாலை வேளைகளில் சிலை அருகே பானி பூரிக்களையும் , உளுந்த வடைகளையும் ஆமை வடைகளையும் ஆசையோடு தின்று கொண்டு இருக்கும் மாணவர்களையும்,பெரியோர்களையும் பார்த்தபடி நான் சென்று இருக்கிறேன். தங்களுக்கு பின்னால் ஒரு மனிதனின் சிலை இருப்பது மட்டுமே அவர்களுக்கு தெரியும்.

அந்த மாணவன் எங்கோ சேலத்தில் இருந்து இங்கே படிக்க வந்து நம்ம ஊர் பேராசிரியர் சீனிவாசனுக்காக உயிர் தியாகம்செய்தவன் என்ற வரலாறு அவர்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை...


_______________________________________________________________________________________________


இதை பற்றி பாளையங்கோட்டையில் படிக்கும் மாணவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஒரு சமயம் புனித சவேரியர் கல்லூரிக்கு 1980 கட்டங்களில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றபொழுது அங்குள்ள மாணவர்கள் லூர்து நாதர் பற்றியும் அவரது சிலையை பற்றியும் கேட்டபொழுது, மாணவர்களிடம் பதில் இல்லை , லூர்து நாதன் யார் என்று என்னிடம் கேட்டார்கள். வரலாற்று நினைவுகளை எப்படி நினைவில் கொள்ளாமல் புறக்கணிக்கிறோம் என்று சொல்ல வேறு என்ன சான்று வேண்டும்???

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
13-10-2015

‪#‎KSR_Posts‬ ‪#‎KSRadhakrishnan‬ #Loordhunathan #StxaviersCollege #palayankottai

1 comment:

  1. Very Important message. Yesterday i have seen his statue in Palaynakottai. I searched History for this. I found here. Thank you

    ReplyDelete

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...