தென்னாப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த அன்புக்குரிய நண்பர் பி.படையாச்சி அவர்கள், அந்நாட்டிலுள்ள கோஸ்ட்லேண்டில் வரும் 2015 நவம்பர் 06 மற்றும் 07- ஆகிய இருநாட்களில் “ஈழத்தில் அமைதியும் தமிழர்களுக்கு நீதியும்” என்ற தலைப்பில் நடக்க இருக்கும் மாநாட்டிற்கு அழைத்துள்ளார்.
இம்மாநாட்டின் அமைப்பாளர் திரு.பி.படையாச்சி அவர்கள் மனித உரிமை, சர்வதேச அரசியல், ஈழத்தமிழர் பிரச்சனைகளில் தொடர்ந்து ஆர்வமும், களப்பணியும் ஆற்றிக்கொண்டு வருகின்றார். அவரும் நானும் பல சர்வதேச ஈழத்தமிழர் பிரச்சனைகள் குறித்த மாநாடுகளில் கலந்துகொண்டிருக்கின்றோம். திரு.பால் நியூமென் அவர்களும் இந்த நிகழ்வுக்கு ஆர்வம் செலுத்தி வருகின்றார்கள்.
இம்மாநாட்டில், தென் ஆப்பிரிக்க அதிபர், அந்நாட்டின் அமைச்சர்கள், பல்வேறுநாடுகளின் அரசியல் தலைவர்கள், உலகெங்குமுள்ள மனித உரிமை ஆர்வலர்கள், பல்துறை அறிஞர்கள் என உலகளவில் பதினைந்து நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்ள தென்னாப்ரிக்கா செல்ல இருக்கின்றேன். தென் ஆப்ரிக்காவில் உள்ள நண்பர்கள் என்னை அங்கு சந்திக்கலாம்.
அங்குள்ள தொடர்புக்கு :
79 Waltdorf , 771 Townbush Rd , Pietermaritzburg , South Africa - 3201.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
04-10-2015.
#SouthAfricaConference #KsRadhakrishnan #KSR_Posts
No comments:
Post a Comment