ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான கோரிக்கையான நெல்லை மாவட்டம் , ராம நதி- ஜம்பு நதி இணைப்பு திட்டம் நடைமுறைக்கு வருவதாக செய்திகள் வந்துள்ளன.
கடனா நதி , ராம நதி-ஜம்பு நதி மூன்று நீராதாரங்களை இணைத்து ஆலங்குளம் பாகுசத்திரம் பகுதிகள் பயன்படும் திட்டம்தான் இந்த இணைப்பு திட்டம். சிற்றார்களாக இருக்கும் இந்த நீரோடைகளை இணைத்து ஆவுடயானூர் பகுதி வழியாக சென்று தென்காசி வட்டாரத்தில் கிழக்கு பகுதியும், நெல்லை நகரின் மேற்கு பகுதியும் இதனால் பயனடையும். 1962 ல் திட்டமிடப்பட்டு இதுவரை நடைமுறைக்கு வராத திட்டம் செயல்வடிவுக்கு வந்தால் நெல்லை மாவட்டத்தின் ஒரு பகுதி செழிப்படையும். இதனால் நாலாயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெரும். குடிநீர் வசதியும் பெறலாம்.
-கே.எஸ்..இராதகிருஷ்ணன்
06-10-2015
#Nellai_RamaRiver_JambuRiver_Linking #KSR_Post #KSRadhakrishnan
No comments:
Post a Comment