Tuesday, October 6, 2015

நாடாளுமன்ற உறுபினர்களின் ஊதியமும் சலுகையும் - MP's Salaries and allowances


கடந்த 2010 ல் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபொழுது நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் திருத்தியமைக்கப்பட்டது . தற்பொழுது மூன்று உறுப்பினர்களின் குழு அமைக்கப்பட்டு எம்பிக்களின் ஊதியங்களை திருத்தி அதற்கான பரிந்துரைகளை இத்த குழு வழங்கியது. பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் யோகி ஆதித்யநாத் தலைமையில் இயங்கிய கூட்டு கமிட்டி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை இருமடங்காக அதிகரிக்க வேண்டுமென்று பரிதுரைத்தது. 2010ல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மாதத்திற்கு ஐம்பதாயிரம் என்று வழங்கப்பட்டது, நாடாளுமன்றம் நடக்கும்பொழுது உறுப்பினர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் படியும் உண்டு. ஒரு மாதத்திற்கு தொகுதி படியென்று ரூபாய் 45000 என்றும் அலுவலக பணிகளுக்காக ரூபாய் 15000 என்றும், உதவியாளர் ஊதியமென்று ரூபாய் 30,000 என்றும் வழங்கப்பட்டது.

மேலும் இந்த ஊதியமும் சலுகைகளும் அதிகமாக்கபடவேண்டும் என்று இந்த குழு பரிந்துரைத்தது. இந்த குழு பரிந்துரைத்த ஊதிய உயர்வும் சலுகைகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, கீழே உள்ள பட்டியல் சொல்கிறது.

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களுக்கும் , வருடத்திற்கு டெல்லி சென்று வர பத்து  இலவச விமான டிக்கட்களும் ,  ராஜதந்திர பாஸ்போர்ட் வழங்க வேண்டுமென்று இந்த குழு பரிந்துரைத்ததை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும். இப்படி நாட்டின் பொருளாதாரத்தை பாழ்படுத்தக்கூடிய பரிந்துரைகளை இந்த குழு அளித்துள்ளது.


நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களுகெல்லாம் இப்படி சலுகைகள் வழங்கவேண்டிய அவசியன்மென்ன இருகின்றது..

நாடாளுமன்றம் அவைகள் நடப்பதும் இல்லை , மக்கள் பிரச்சனைகளை பேசுவதுமில்லை , சலுகைகளும் ஊதியங்களை ,மட்டும் கூட்டி கொள்வதில் என்ன நியாயங்கள் உள்ளன .??

ஊதியத்தை தங்களுக்கு கூட்டிகொள்ளும் மசோதாவில் மட்டும் நாடாளுமன்றத்தில் ஒட்டுமொத்த குரலில் எவ்வித எதிர்ப்புமின்றி ஆதரிப்பார்கள். சுயநலம்தான் அப்போது மேலோங்கி நிற்கிறது.

-கே.எஸ்..இராதகிருஷ்ணன்
06-10-2015
 ‪#‎KSR_Post‬ ‪#‎KSRadhakrishnan‬  #MPSalariesandallowances

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்