Tuesday, October 6, 2015

இலங்கையின் பாரம்பரிய சின்னங்களைப் பாதுகாக்க அமெரிக்கா 300,000 டாலர்கள் நிதியுதவி

இலங்கையில் பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்கவும், புராதன தொல்பொருட்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும் சுமார் 300,000 டாலர்களை நன்கொடையாக வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

இலங்கையின் கலாச்சாரம் மற்றும் மத பாரம்பரியங்களை பாதுகாக்கும் முயற்சிகளின் ஒரு அங்கமாக, புராதன பௌத்த மடாலயத்தை மீளமைக்கவும், அநுராதபுர தொல்பொருள் அருங்காட்சியகத்தின் புராதன தொல்பொருட்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.

இது குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷப் கூறுகையில், "இலங்கையின் மதம் மற்றும் கலாச்சார பாரம்பரிய பகுதிகளை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அமெரிக்கா அறிந்துள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் இதற்காக 100 மில்லியன் இலங்கை ரூபாயை அமெரிக்கா வழங்கியுள்ளது.
ரணில் அமேரிக்கா ஆதரவாளர் என்பதனால் உள்ளக விசாரணை , சிங்கள அரசை காப்பாற்றுதல், நிதிகளை அள்ளி தருதல் என அமெரிக்கா தன் பணிகளை ஆரம்பித்துவிட்டது. ராஜபக்ஷேவை சீனா எப்படி ஆதரித்ததோ அதேபோல ரணிலை அமேரிக்கா தூக்கி பிடிக்கின்றது. சர்வதேச சுதந்திரமான விசாரணை என்ற கோரிக்கையும் கிடப்பில் போட்டுவிட்டது . ரணில் இனிமேல் அமெரிக்காவின் கண்ணைசைவுக்கு ஏற்ற படி ஆட்சியை செய்வார். ஈழ தமிழர்களுடைய பிரச்சனை ஒரு தீர்வுக்கு வராமல் துயரத்தின் விளிம்பிலேயே இருக்கவேண்டிய நிலைதான். இந்தியாவும் வாய் மூடி மௌனியாக உள்ளது , என்ன செய்ய ????

-கே.எஸ்..இராதகிருஷ்ணன்
06-10-2015

#Srilanka_US_Relationship #KSR_Post #KSRadhakrishnan

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்