Tuesday, January 7, 2020

திருப்பூர்

நேற்று #திருப்பூரில்  நண்பர் நாகராஜனுடைய  பின்னலாடை தொழிற்சாலையில் வளர்க்கும் லவ் பேர்ட்ஸினை (Love birds) காண அழைத்துச் சென்றார். அப்படியே அவருடைய  பின்னலாடை தொழிற்சாலை முழுவதையும் ஒவ்வொரு பகுதியாக சுற்றிக் காட்டினார்.  

அங்கு அவரிடம் பணிக்கு இருக்கும் வட நாட்டினரில் பெரும்பாலோனார் காஷ்மீரைச் சார்ந்த பெண்களாக இருந்ததை காண நேர்ந்தது. இவர்கள் உங்களுக்கு  பயன்படுமாறு  வேலை செய்கின்றனரா என்று ஐயத்துடன் அவரிடம் நான் கேட்டதற்கு, “நிச்சயமாக, எந்த தொந்தரவும் இல்லாமல் வேலை செய்கின்றனர்” என்றார். மேலும், “அவர்கள் இங்கு விரும்பியே வந்து வேலைசெய்கிறார்கள். அவர்களுக்கு நாங்கள் கூலியாக 500 ரூபாயும்  தங்குவதற்கு இடமும் கொடுக்கிறோம்.கடினஉழைப்பாளி
களான அவர்களுக்கு சப்பாத்தியுடன் ஒரு வெங்காயம் இருந்தால் போதும் அவர்களுடைய காலை உணவை முடித்துக் கொள்வார்கள்.” அவர்களில் ஆன்கள் மது அருந்திவிட்டு ஏதாவது தகராறு செய்ததற்காக அவர்களை பணிநீக்கம் செய்ய முற்படுகையில் “ஐயா தயவு செய்து எங்களை வேலையை விட்டு நீக்கிவிடாதீர்கள். நாங்கள் திரும்ப ஊருக்குச் சென்றால் அங்கு நாங்கள் 2 ரூபாய்க்கும் அதிகபட்சமாக 10 ரூபாய்க்கும் தினமும் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். எங்களுக்கு டீ கூட கொடுக்காமல் வெறும் ஜர்தா பாக்கினை கொடுத்து எங்களை ஆர்வமாக வேலை செய்யும்படி எங்கள் ஊரில் தூண்டி விடுவார்கள். 


இங்கு நிலைமை அப்படி இல்லை, எங்களுக்கு நல்ல உணவு கிடைக்கின்றது. ஞாயிறு விடுமுறை கிடைக்கிறது. நாங்கள் இங்கே விருப்பப்பட்ட இடங்களுக்கு செல்லக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கிறது. தமிழகத்தை சார்ந்தவர்கள் எப்படி துபாய் போன்ற நாடுகளுக்கு சென்று  பொருளீட்டநினைக்கிறீர்களோ;
எங்களுக்கு தமிழ்நாடு அப்படித் தான். வருடத்திற்கு ஒரு முறை ஊருக்கு சென்று வருகிறோம். வேலையும் நன்றாக நடக்கிறது”என இங்கு வேலையுள்ள வட மாநிலத்தார் சொல்கின்றனர் என  நாகராஜன் குறிப்பிட்டார். இந்த ஆலையின் அருகேதான் எனக்கு வேண்டப்பட்ட திருப்பூர் டெக்டைல்ஸ்
(நாயக்கர் மில்) இருந்தது. இது திருப்பூரின் தொழில் அடையாளமாக திகழ்ந்தது. இந்த ஆலைக்கு 1970-80களில் அடிக்கடி செல்வதும் உண்டு.   திருப்பூர் டெக்டைல்ஸ் வழக்குகளை சென்னை உயர்நீதி மன்றத்தில் நடத்தியும் உண்டு.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
07.01.2020
#ksrposts

#திருப்பூர்


No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...