Wednesday, January 8, 2020

உலகம்_சமாதானம்

உலகம் பரபரப்பின்  உச்சத்தில், ஈரானும் ஈராக்கும்  ஒன்று    சேர்ந்து அமெரிக்காவினை  விரட்டுவது புவி வரலாற்றின் திருப்பம்

டிரம்ப்  முகத்தை  மூடிகொண்டு  கண்கள் சிவக்க உத்தரவுகளை  வெள்ளை மாளிகையிலிருந்து பிறப்பிக்கின்றார்

இந்நேரம் பார்த்து ரஷ்ய கப்பல் சிரிய கடலோரம் வந்து அதன் போக்கில் நிற்கின்றது, "டேய் இங்க எதுக்குடா வந்தீங்க?, சொல்லுங்கடா" என அமெரிக்கா கத்தி கேட்டாலும் புட்டீன் போல கப்பலும் அமைதி அதாவது நாங்கள்நிலமையினைகவனிக்
கின்றோம் என்கின்றது ரஷ்யா

அணுசக்தி  ஒப்பந்ததை   ரத்து செய்துவிட்ட ஈரான் எந்நேரமும் தன் ஏவுகனையில் அணுகுண்டை பொருத்தலாம்

அமெரிக்க பிரிட்டன் போர்கப்பல்களும் நீர்மூழ்கிகளும் தயாராய் இருக்க, இஸ்ரேல்   விழித்துக்  கொண்டு இருக்கின்றது

உலகம் ஒவ்வொரு நொடியும் பெரும் பதற்றத்தில் இருக்க,ஈராக் மேல் அமெரிக்க ஹெலிகாப்டர்கள் பறக்க, அவை எப்பொழுதும் வீழ்த்தபடலாம் அந்த நொடியில் போர் வெடிக்கலாம் என உலகம் அச்சத்தோடு  உள்ளது,

ஈரானை அமெரிக்கா வீழ்த்தி விடக்
கூடாது என்று விரும்புவதை இஸ்ரேலை அழிக்கவேண்டும் என்ற  ஈரானிய நிலைப்பாடு......?

எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் இஸ்ரேல் பலஸ்தீன மக்கள் அமைதியாக வாழவேண்டும்.
 
சுமார் 60 இலட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவான தென்மேற்கு ஆசியாவில் வெறும் 20 ஆயிரம் சதுரகிலோமீட்டர் இடத்தை யூதர்களுக்கு  விட்டுக்
கொடுக்கமாட்டோம் என்பது நிலப் பிரச்சனை என்பதைவிட எல்லாம் இஸ்லாமிய     நாடுகளாகவே இருக்கவேண்டும், வேறு மதத்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளே மேற்காசியாவில் இருக்கக்கூடாது என்று நினைக்கும் பன்மைத்துவத்துக்குப் எதிரானது. அனைவரும் வாழ,நாடுகள்
அமைதி பெற போரை தடுப்போம்.
 தேசிய இனம், நாடு,புவி அரசியல், உலகம் சமாதானம் என்ற  கட்டமைப்பை பேனுவோம்.

The Indian Ocean island Naval Base of #Diego_Garcia is the key launchpad for United States in case of an attack on Iran in the wake of the assassination of Iranian General Qassem Soleimani in a drone strike. The Pentagon has sent six B-52 strategic bombers to military base on Diego Garcia that is beyond the range of Iran’s ballistic missiles to prepare to hit Tehran if given the order.

It is not sure if Iran has operationalized its S400 batteries..

https://www.ft.com/content/3d5a4cf0-288f-11ea-9a4f-963f0ec7e134

#உலகம்_சமாதானம்

#KSRPostings
K S Radhakrishnan
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
08-01-2020


No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்