Tuesday, January 7, 2020

ஆளுநருடைய_உரையில்_ஈழத் #தமிழர்களுக்கு_இரட்டைக்_குடியுரிமை #ஆபத்தானது

#ஆளுநருடைய_உரையில்_ஈழத் #தமிழர்களுக்கு_இரட்டைக்_குடியுரிமை 
#ஆபத்தானது
————————————————-
நேற்று தமிழக சட்டப் பேரவையில் ஆளுநருடைய உரையில் ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப் பற்றி நன்றாக புரிந்துக் கொண்டு பேசுங்கள், குழப்பத்தை உண்டாக்காதீர்கள். 

இதில் புரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமான விடயம் என்னவென்றால் இங்கு இருக்கும் ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை கொடுக்கப்பட்டால் அவர்களின் நிலைமை இரண்டு பக்கமும் அடி வாங்கும் மத்தளம் போல் ஆகிவிடும். 

இப்போது அதிபராகவும் பிரதமராகவும் ஆட்சியில் உள்ள ராஜபக்சே சகோதரர்கள், “இந்தியா தான் உங்களுக்கு இரட்டைக் குடியுரிமை கொடுத்துள்ளதே, அங்கேயே இருங்கள்” என எளிதாக நாடு திரும்பும் ஈழத் தமிழர்களுக்கு அனுமதி மறுக்க வாய்ப்பிருக்கிறது. 

தொழில் ரீதியாக வணிக ரீதியாக மூன்று தலைமுறைகளாக இங்கேயே திருமணம் செய்துக் கொண்டு தொழில் உறவுகள் என இருப்பவர்களுக்கு இந்திய குடியுரிமை தாராளமாக கொடுக்கலாம்.  

இங்கிருந்து தன்னுடைய சொந்த நாடான இலங்கைக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்று விருப்பம் உள்ளவர்களுக்கு எந்த வித தங்கிய கட்டணமும் (staying charges) மத்திய அரசு வசூலிக்காமல் அவர்களை எளிமையாகவும் நிம்மதியாகவும், இந்திய அரசாங்கத்தால் அவர்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளையும் அவர்கள் பாதுகாப்பாக  வாழ்வதற்கான உத்திரவாதத்தையும் இலங்கை அரசிடமிருந்து பெற்று அவர்களை இலங்கைக்கு அனுப்பி வைப்பதே பயனளிக்கக் கூடிய நடைமுறையாக இருக்கும். 

ஏனெனில் செல்வா காலத்திலிருந்து பிரபாகரன் காலம் வரைக்கும் கிட்டத்தட்ட 30-40 வருடங்களாக தன்னுடைய நிலம், தன்னுடைய பூர்விக (home land)நாடு, ஈழ தேசியப இனப்பிரச்சனை என்ற போராட்டங்கள் எல்லாம் இவர்கள் இங்கேயே தங்கிவிட்டால அந்த குரலுக்கான உரிமையும் நியாயங்களும் அழிக்கப்பட்டு விடும் என்பதை கவனத்தில் கொண்டு பேசுங்கள். 

இந்த பிரச்சினை குறித்து நன்கு அறிந்தவர்களின் ஆலோசனையின் பேரில் நடப்பது நல்லது. எங்களைப் போன்றவர்களுக்கு இதை எல்லாம் கேட்கும் போது  வேதனையாக இருக்கிறது. வேறு என்ன சொல்ல முடியும். புரிந்தவனுக்கு மரியாதை இல்லை. புரிந்தவனுடைய வார்த்தை அம்பலத்தில் ஏறுவதில்லை. ஏதோ போகிற போக்கில் பேசிக் கொண்டிருப்பது நல்லதல்ல.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
07.01.2020
#ksrposts
#ksradhakrishnanposts
#இரட்டை_குடியுரிமை
#ஈழத்தமிழர்கள்

No comments:

Post a Comment

Nov 10, 2025 கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’

  கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் ‘களஞ்சியம்’ திங்கள் இதழ் ஆசிரியருமான முனைவர் எஸ். பத்மநாபன் அவர்கள் கோவையில் மற...