Thursday, January 9, 2020

பி.எஸ். குமராசாமிராஜா

#பி_எஸ்_குமாரசாமி_ராஜா 
———————————-
சென்னை கிரீன்வேஸ் ரோடு எனப்படும் பசுமைவழிச்சாலையை  18 ஆண்டுகளுக்கு   முன்பாக பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் பெயரால் அழைக்க பெயர் மாற்றம் செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இன்றும் பத்திரிக்கைகள் கிரீன்வேஸ் ரோடு(பசுமை வழி சாலை) என்றே எழுதி வருகின்றன. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பிறந்த செல்வந்தரான குமராசாமி ராஜா அவர்கள் ஒரு நேர்மையான முதலமைச்சர். ஒரிசாவின் அன்றைய கவர்னர்.ஓமந்தூரார் விட்டுச்சென்ற அணைகள், கிராமங்கள் முன்னேற்றம்,கல்வி போன்ற திட்டங்களுக்கு போதிய நிதியை ஒதுக்கித் தந்தவர்.பொது வாழ்வுக்கு இலக்கணமாகதிகழ்ந்தவர் .தமிழக சட்டமன்றத்தில் இவருக்கு படம்கூட வைக்கப்பட
வில்லை.
தனது சொத்துக்களை  அப்போது கோடிக் கணக்கில் இராஜ பாளையத்தில் இருந்தது. அப்படியே பொது மக்கள் வசதிக்கு அள்ளி தந்தார்.இவரையும்
சூழ்ச்சிகள் செய்து ஶ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் தோற்கடித்தனர். அந்த தோல்விக்கு பின்னும் பிரதமர நேரு வற்புறுத்தியும் சென்னை ராஜதானியின் முதல்வர் ஏற்க மறுத்து விட்டார். அது நியாயமற்றது என சொல்லியும் விட்டார். வாழ்க நாடு......

#

 
#கிரீன்வேஸ்ரோடு
#பசுமைவழிசாலை
#KSRadhakrishnanpostings 
#KSRPostings
K S Radhakrishnan
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
09-01-2020

No comments:

Post a Comment

#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!

  #பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...