Monday, January 6, 2020

புதுவை_மாநிலம்

#புதுவை_மாநிலம் 
—————————
கடந்த 1978 காலக்கட்டங்களில் புதுச்சேரி மாநிலத்தை தமிழகத்தோடு இணைக்க வேண்டுமென்று அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய் முன்வைத்த யோசனையை எதிர்த்து புதுச்சேரியே வெகுண்டு எழுந்தது. புதுச்சேரி தனி மாநிலம் கோரி 1987லிருந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஏறத்தாழ 12 லட்சம் மக்கள் தொகையை கொண்டது புதுவை. 
புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் (ஆந்திரத்தின் அருகில்), மாகி (கள்ளிக்கோட்டை - கேரளா அருகில்) போன்ற பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுபட்டது. அதேபோல, மேற்கு வங்கத்தில் சந்திரநாகூர் பிரெஞ்சு பிடியிலிருந்து இந்தியாவில் இணைந்தது. இன்றைக்கு இந்த பகுதிகளில் பிரெஞ்சு நாட்டு தொடர்புகள் நீடிக்கின்றன. சுமார் 5 லட்சம் மக்கள் தொகை உள்ளதே தனி மாநிலமாக அமைந்துவிட்டது. மத்திய நிதி கமிசனிலும் புதுவையினுடைய தொடர்போ, அதனால் பயனற்ற யூனியன் பகுதியாக உள்ளது என்பது வேதனையான விடயம். டெல்லிக்கும் இதேபோன்ற நிலைமை தான். நிதிப் பங்கீடுகளில் பல சிரமங்களை இந்த யூனியன் டொமினியன் அரசுகள் சந்தித்து வருகிறது என்பது 40, 50 ஆண்டு காலமாக தெரிந்த விடயமே. 

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
06-01-2020.

#KSRPostings #KSRadhakrishnanPostings #புதுச்சேரி
#Pondicherry


No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...