Saturday, January 4, 2020

சிறப்பான பலன்கள் சுமாரான பலன்கள் என்று பிரித்து...

சமீபத்தில் தினமலரை புரட்டும் போது எதேச்சையாக அதில் வெளிவந்த ராசிபலன் பிரசுரம் பக்கத்தை கண்டு ஒரு கணம் ஸ்தம்பித்து விட்டேன். அதில் சிறப்பான பலன்கள் சுமாரான பலன்கள் என்று பிரித்து இருந்தது. படித்துப் பார்த்ததில் சிறப்பான பலன்களில் என்னவெல்லாம் இருக்கிறதோ அப்படியே அதற்கு நேர்மாறாக சுமாரான பலன்களில் ஒன்று இருந்தது.

உதாரணத்திற்கு சிறப்பான பலன்களில் அரசியல்வாதிகளுக்கு ஆகஸ்ட் 31க்கு பிறகு பணம், புகழ் மற்றும் எதிர்பார்த்த பதவியும் கிடைக்கும் என்று போட்டுவிட்டு அப்படியே அதற்கு முற்றிலும் மாறுபட்டு சுமாரான பலன்களில் அரசியல்வாதிகளுக்கு ஆகஸ்ட் 31க்கு பிறகு முயற்சிகளில் தோல்வி ஏற்படலாம் என்றும் எதிர்பார்த்த புகழ் கிடைக்காமல் போகலாம் என்றும் இருக்கிறது.

எனக்கு இது போன்ற விடயங்களில் நம்பிக்கை இல்லை என்றாலும் இதை அப்படியே நம்பி தங்கள் நாட்களையும் வாழ்க்கையயும் திட்டமிடும் பலரை நான் அறிவேன். அது போன்றவர்களுக்கு இது நிச்சயம் குழப்பத்தை ஏற்படுத்துவதோடு அவர்களது தன்னம்பிக்கையயும் அசைத்துப்  பார்த்துவிடும். இதன் மீது நம்பிக்கையை வைத்தவர்களை நினைந்து இந்த பலா பலன்களை கணிக்க வேண்டமா?
#ksrpost
4-1-2020.


No comments:

Post a Comment

Yoga day column by VP

  Yoga day column by VP @CPR_VP in Tamil Dinamani, today 20- 6-2026 @narendramodi @PMOIndia @AmitShah @nsitharaman @NitinNabin @...